Saturday, December 18, 2010

கலைஞருக்கு விவசாயி கொடுத்த பளீர் அடி...............

உண்மை, உண்மை, உண்மை, 
கடந்த 23-ம் தேதி கொத்தமங்கலம் கிராமத்தில் புதுக்கோட்டை மாவட்ட தி.மு.க. செயலாளர் பெரியண்ண அரசு தலைமையில் இலவச வண்ணத் தொலைக்காட்சி வழங்கும் விழா நடந்து கொண்டிருந்தது.அப்போது பயனாளிகள் பட்டியலில் இருந்து விஜயகுமார் என்ற பெயர் வாசிக்கப்பட்டதும்,கொத்தமங்கலம் மணவாளன் தெருவைச் சேர்ந்த விஜயகுமார் என்ற விவசாயி மேடையேறினார்.

அவருக்கு வழங்கப்பட்ட தொலைக்காட்சிப் பெட்டியை வாங்கிக் கொண்டார்.ஒரு விநாடி அங்கே நின்றவர்,டி.வி.யை பெரியண்ண அரசுவிடமே திருப்பிக் கொடுத்துவிட்டு,கூடவே ஒரு மனுவையும் கொடுத்தார்.ஏதோ கோரிக்கை மனு கொடுக்கிறார் என்று அரசுவும் சாதாரணமாக வாங்கிப் படித்தார்.

அதில் மனிதனுக்கு டி.வி. என்பது பொழுதுபோக்கு சாதனம்தான். ஆனால்
அதைவிட முக்கியமானது உணவு, உடை, உறைவிடம். தமிழகத்தில் மொத்தம் 88 துறைகள் இருக்கின்றன. இவை தன்னிறைவு அடைந்து விட்டனவா? குறிப்பாக, விவசாயிகளைப் பாதிக்கும் மின்சாரத்துறை தன்னிறைவு அடைந்து விட்டதா?

துறைகள் எல்லாம் தன்னிறைவு அடைந்த பிறகு மிதமிஞ்சிய பணத்தில் இந்த டி.வி.யை வழங்கியிருந்தால் மகிழ்ச்சியாக இருந்திருக்கும். இதற்கு மட்டும் எங்கிருந்து நிதி வந்தது?இந்தியாவின் முதுகெலும்பான விவசாயிகள் தமிழகத்தில் அதிகம் வசிக்கிறார்கள். டி.வி. வழங்கும் பணத்தை வைத்து விவசாயிகளுக்குத் தேவையான மின்சாரத்தைக் கொடுத்திருக்கலாம்.

தமிழகத்திலேயே மிகவும் பின்தங்கிய மாவட்டத்தைக் கண்டறிந்து போதுமான மின்சாரத்தை தடையின்றிக் கொடுத்து அந்த ஒரு மாவட்டத்தையாவது தன்னிறைவு அடையச் செய்திருக்கலாம்.

இலவசம் என்பது எங்களுக்கு வேண்டாம். தரமான மருத்துவம், கல்வி, மும்முனை மின்சாரம் மற்றும் வேலை வாய்ப்புகளை வழங்கினாலே போதும். அதை வைத்து நாங்களே சம்பாதித்து டி.வி.முதல் கார் வரை அனைத்தையும் வாங்கிக் கொள்வோம். எங்களுக்கு என்ன தேவையோ அதை நாங்களே பூர்த்தி செய்து தன்னிறைவு அடைந்து விடுவோம்.

விலைவாசி உயர்வு, எரிபொருள் விலை உயர்வு, குடிநீர் பற்றாக்குறை, லஞ்சம், ஊழல் என்று ஆயிரக்கணக்கான குறைகள் இருக்கும்போது ஒரு நடமாடும் பிணமாக நான் எப்படி டி.வி. பார்க்க முடியும்? எனவே எனக்கு இந்த டி.வி. வேண்டாம். முதல்வர் கருணாநிதி மீது எனக்கு மிகுந்த மதிப்பும், மரியாதையும், அன்பும் உள்ளது.

எனவே,இந்த டி.வி.யை அவருக்கே அன்பளிப்பாகக் கொடுக்க இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்கிறேன்.அவர் இதை ஏற்றுக் கொள்ளாவிட்டால் என் மனம் மேலும் வேதனைப்படும். அரசு மற்றும் அதிகாரிகள் தங்கள் கடமைகளை சரியாகச் செய்தாலே போதும். இந்தியா வல்லரசாகிவிடும் என்று நீண்டது  அந்த மனு.

இதைப் படித்த பெரியண்ண அரசு முகத்தில் ஈயாடவில்லை.அருகில் இருந்த அதிகாரிகள் அதிர்ந்து போனார்கள். என்றாலும் அந்த மனுவையும் டி.வி.யையும் வாங்கி வைத்துக் கொண்டு மேலும் பரபரப்பை உண்டாக்காமல் விஜயகுமாரை அனுப்பி வைத்தார் அரசு

நான் ஒரு சாதாரண விவசாயி. விவசாயிகள் எல்லாம் மின்வெட்டால் பாதிக்கப்பட்டு விளைநிலத்தை ரியல் எஸ்டேட்காரன்கிட்ட வித்துட்டு நகரத்துல போய் கூலி வேலைக்கும்,ஹோட்டல் வேலைக்கும் அல்லாடிக்கிட்டிருக்கான்.

இந்த நிலை, நாளைக்கு எனக்கும் என் பிள்ளைகளுக்கும் வரப் போகிறது. எதிர்காலத்தை நினைத்து மனம் கலங்கிப் போய் இருக்கிறது. ராத்திரியில படுத்தால் தூக்கம் வர மாட்டேங்குது.

சாராயத்தை குடிச்சுட்டு, ஒரு ரூபாய் அரிசியை தின்னுட்டு உழைக்கும் வர்க்கம் சோம்பேறியாகிக்கிட்டிருக்கு.ரொம்ப சீப்பா கணக்குப் போட்டாலும் ஒரு டி.வி. ஆயிரம் ரூபாய்னு வச்சிக்குங்க. தமிழ்நாட்டில் ரெண்டு கோடி குடும்ப அட்டைகள் இருக்கு.2கோடி குடும்ப அட்டைக்கும் டி.வி. கொடுத்தால் இருபது லட்சம் கோடி செலவாகும்.இதை வைத்து 88 துறைகளையும் தன்னிறைவு அடையச் செய்தாலே போதுமே.

கனத்த இதயத்தோடும், வாடிய வயிறோடும் இருக்குறவனுக்கு எதுக்கு டி.வி.அவன் பொழப்பே சிரிப்பா சிரிக்கும்போது அவன் டி.வி. பாத்து  வேற சிரிக்கணுமாக்கும்.அதுனாலதான் நான் டி.வி.யை திருப்பிக் கொடுத்தேன்’’ என்றார்.

டி.வி.யை திருப்பிக் கொடுத்த கையோடு  முதல்வர் கருணாநிதிக்கு கடிதம் ஒன்றையும் எழுதியிருக்கிறார் விஜயகுமார்.அந்தக் கடிதத்தில் கொத்தமங்கலத்துக்கு வந்த டி.வி.க்கள் 2519. அதில் 2518 மட்டும்தான் வழங்கப்பட வேண்டும். எனக்கான ஒரு டி.வி.யை எனது அன்புப் பரிசாக நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்என்று குறிப்பிட்டு அதை ஃபேக்ஸ் செய்துள்ளார்.

மக்களிடம் இருந்து சுரண்டப்படும் பணத்தில் மக்களுக்கே கொடுக்கப்படும் லஞ்சம் தான் இலவசங்கள் என்பதை விவசாயி விஜயகுமார் பொட்டில் அடித்தாற்போல் தெளிவுபடுத்தியுள்ளார். மக்களை சோம்பேறிகளாக்கும் இலவசத்துக்கு எதிராக போர் தொடுத்திருக்கும் அவரை பாராட்டத்தான் வார்த்தைகளே கிடைக்கவில்லை.. 
இலவச கலர் டிவியை முதல்வருக்கே திருப்பிக் கொடுத்து அவருக்கு கொடுத்த முதல் அடி இது .......................

41 comments:

 1. இது ஒரு தீப்பொறி...............

  ReplyDelete
 2. இதைப் படிப்பதற்க்கு ஒரு செய்தி தான் ஆனால் இது ஒரு மாமேதையின் செயல்...........

  ReplyDelete
 3. மிக அருமையான பதிவு..........

  ReplyDelete
 4. ippadiye anaivarum nadakavendum..

  ReplyDelete
 5. eppadi sonalum puriyapovathilai

  ReplyDelete
 6. ottu motha ottukkalum, 49-O 'vinkeel ottu pottu paarungappaa. ithaikkooda seiyyavillai endraal.....

  with unconditional love,
  Nisha Ram

  ReplyDelete
 7. மிக அருமையான பதிவு.

  அந்த விவசாயி
  செருப்பால அடிச்சிருக்கார்.
  அவருக்கு என் சிரம்தாழ்ந்த வணக்கங்கள். எத்தன செருப்பு பறந்து வந்தாலும் மானாட மார்பாட பாத்துக்கிட்டு உக்காந்து இருக்கும் பெரியவருக்கு உறைக்குமா?

  ReplyDelete
 8. இந்தியன்December 19, 2010 at 7:26 AM

  அந்த விவசாயி மிக உயர்ந்து விட்டார். இப்படி எல்லோரும் நினைக்க ஆரம்பித்தால் தான் நமக்கு உண்மையான விடியல் வரும்.

  ReplyDelete
 9. பாலகிருஷ்ணா:
  அந்த விவசாயியின் குரல் அனைத்து தமிழனின் குரல்.....
  இது தமிழகத்தின் விடிவெள்ளிக்கு புரிகின்றதோ இல்லயோ
  நாம் அனைவரும் இந்த தீயை ஏந்திச்செல்வோம்....
  இது நாம் நமக்காக தெர்ந்தெடுத்த தானைத் தலைவனை இடிந்துரைக்க அல்ல
  நம்மை ஒன்றினைக்க(பயன்படட்டும்).........

  ReplyDelete
 10. @விக்கி உலகம்
  இது இலவசத்துக்கு கொடுத்த அடி........

  ReplyDelete
 11. @இந்தியன்...
  நினைக்கவேண்டும் என்பது மட்டுமல்ல ,செயல்படவேண்டும்........

  ReplyDelete
 12. @பாலகிருஷ்ணா:
  கட்டாயம் இது ஒவ்வொருவரின் மனதிலும் ஏற்ற வேண்டிய தீபம்........

  ReplyDelete
 13. ஒரு கொடுமையை பாருங்கள்.....
  ஒரு தலைவன் புத்திசாலியாக இருந்தால் அவன் சார்ந்த சமூகம் வளம்பெரும்...
  ஆனால் இங்கு கலைஞரின் புதிசாலித்தனத்தால்(அவரை அனைவரும் அப்படிதான் சொல்கிரார்கள் ) தமிழகம் அடைந்த..
  அடைந்து கொண்டிருக்கிற(இது தொடரும்...தமிழன் தன்மானத்தோடு விழிக்கும் வரை தொடரும்)
  நிலையை பாருங்கள்......
  ஒரு தலைவன் சாணக்கியனாக இருந்தால் மட்டும் போதாது.....
  அவன் மனிதனாகவும் இருக்க வேண்டும்....

  இனியாவது ஒரு மனிதனை நமக்கு தலைவனாகத் தேர்ந்தெடுப்போம்.....

  இந்த கலைஞர் மனிதரும் அல்ல நல்ல தலைவரும் அல்ல என்று நிரூபிக்க நம்மிடம் ஆயிரம் காரணங்கள் இருக்கின்றது.......

  இதிலிருந்து நம்மை நல்வழியில் நடத்திசெல்லும் தலைவர்கள் நமக்கு அவ்வளவு விரைவில் கிடைக்கப்போவதில்லை என்பது தெரிகின்றது.

  ஆகையால் தமிழா...அரசு என்பது சாணக்கியர்களின் பிழைப்பு........நமது வாழ்க்கை மட்டுமே நமக்கான வாய்ப்பு....

  தனிமனித மாற்றம் மட்டுமே உலகினை உய்விக்கும்.......

  தீ பரவட்டும்.........

  ReplyDelete
 14. இந்த பெயரில்லா....நான் பாலகிருஷ்ணா.........

  ReplyDelete
 15. @பாலகிஷ்ணா
  மிக அருமையான கருத்து.........

  ReplyDelete
 16. பாலகிருஷ்ணா:
  @navjoni
  நன்றி..

  ReplyDelete
 17. இதைப் படிப்பதற்க்கு ஒரு செய்தி தான் ஆனால் இது ஒரு மாமேதையின் செயல்.

  ReplyDelete
 18. avrukku thondriya ennam matravarkalukkum thondra vendum intha ilavasa sakaapthathai oru mudivuku konduvara vendum...........

  ReplyDelete
 19. எனக்கும் தன்மானத் தமிழன் விஜயகுமார் பற்றி மெயில் வந்தது.பகிர்வு அருமை.

  ReplyDelete
 20. இந்த சம்பவத்தை மற்ற ஊடகங்கள் நிச்சயமாக ஒளி பரப்பவோ,பிரசுரிக்கவோ செய்யாது.எனவே வலைபதிவர்கள் அப்பணியை செய்ய வேண்டும்.
  தீ பரவட்டும்.

  ReplyDelete
 21. நல்லது நடக்கட்டும்!
  நன்மைகள் பெறுகட்டும்!!

  ReplyDelete
 22. Rs 1000 x 2 crore = Rs.2000 crore.. pls dont blowup the news into a sensational events.. just provide us the news, we will decide what to do..

  ReplyDelete
 23. @ SEKKAALI கட்டாயம் தீ பரவும்.........

  ReplyDelete
 24. நல்லதே நடக்கவேண்டும்........

  ReplyDelete
 25. நன்றி.........@ஜோதிஜி......

  ReplyDelete
 26. ///ரொம்ப சீப்பா கணக்குப் போட்டாலும் ஒரு டி.வி. ஆயிரம் ரூபாய்னு வச்சிக்குங்க. ரெண்டு கோடி குடும்ப அட்டைகள் இருக்கு.2கோடி குடும்ப அட்டைக்கும் டி.வி. கொடுத்தால் இருபது லட்சம் கோடி செலவாகும்///

  நானு கணக்குல கொஞ்சம் வீக்கு. ஆனாலும் இது சரியான கணக்கா தெரியலையே.

  ReplyDelete
 27. இலவசத்துக்கு சரியான அடி

  ReplyDelete
 28. வெ.சுகவணன்December 20, 2010 at 11:10 AM

  வெ.சுகவணன்

  அந்த விவசாயியின் செயலுக்கு தலை வணங்குகிறேன் ....

  அந்த இலவச தொலைகாட்சி பெட்டியை நானும் வாங்கியதற்காக வெட்கித் தலைகுனிகிறேன்......

  ReplyDelete
 29. அருமையான விளக்கம் & அடி

  ReplyDelete
 30. I Realy congratz this great hero . this is the real in our life .

  ReplyDelete
 31. Irandu TV kidaikkathaa endru thagidu thaththam seium manithargalukku idaiyil. ippadi oru murpoakku sinthanai seiyavum oru manithara?
  Ilavasa TV kku mattum kanakku paarththirukkirar. Intha thittaththai niraivetra thani Thasildar, Jeep, etc vukku aagum selavu?

  ReplyDelete
 32. கருத்து பகிர்விற்கு நன்றிகள் பல.
  இதுவும் ஒரு தகவல்.....
  ஊழலில் பேசப்படுவது ஊருபாய்..:176 000 கோடிகள்..
  (எண்களில் எழுத முயன்றேன்...முடியவில்லை)
  இந்த தொகையில் கை மாறியது நடைமுறை மாமூலான 30% என்று கணக்கிட்டாலும் உரூபய் 52800 கோடி....நமது இந்திய ஜனத்தொகை முழுதுமாகச் செர்த்தாலும் 120 கோடி தான்...
  இந்த தொகை முழுவதையும் இந்த 120 கோடி மக்களுக்கும் சமமாகப் பகிர்ந்து கொடுப்பதாக வைத்துக்கொண்டால்...
  நபர் ஒன்றுக்கு.....உரூபாய் 440 கோடி தேறும்...
  பின் யாரைய்யா எழை இந்த திரு நாட்டில்?
  பசியாவது பஞ்சமாவது?
  150 கோடியை வைத்துக் கொண்டு தூள் கிளப்பலாமே?????
  உலகத்திலேயே இதுவரை கேட்டிராத இத்துணை பெரிய ஊழலை சாத்திய மாக்கிய மாமனிதருக்கு
  என்ன பட்டம் கொடுக்கலாம்?

  ReplyDelete
 33. suyanalakararkal mathiyil..oru "pothunalavathi"...All the best...WE Proud of YOU..

  ReplyDelete
 34. oruvar dunai illamal thaniyaga seyal pada mudiyatha intha vayatha muthiyavarin seyal peyar podu nallam alla verum suyanallam and pathavi sugam than karanam and thanaku peraku than kudupathil ullavargal thalaivar aga vendum enra asai kaitch ennpathu enna company ponratha md piragu avathu varisu pathvi kodupathaku

  ReplyDelete

கடவுள் வாழும் வீடு . 3

                                                                                                கடவுள் வாழும் வீடு . 3                  ...