செவ்வாய், 31 ஆகஸ்ட், 2010

என் இதயம் பேசுகிறது .7 சகஜமாக நீங்க இங்க தான் இரயில் ஏறுநீர்களா என்று கேட்டாள் எனக்கு உடனே பதில் சொல்வதற்கு இயலவில்லை முன் பின் இப்படி சகஜமாக என்று நினைத்து விட்டு பின்னர் இல்லை என்று ஒற்றை வார்த்தை மட்டும் பதிலாக கூறினேன் ,உடனே எங்கிருந்து வருகிறிர்கள் என்றாள் நான் அமைதியாக ஏன் என்றேன் இல்லை உங்களை பார்த்தவுடன் முன்பே பார்த்த ஞாபகம் அதனால் தான் என்றாள் நான் எனது ஊரின் பெயரை கூறினேன் சிறிது நேரம் அமைதி அந்த அமைதியை கலைக்கும் விதமாக ஒரு டீ விற்பவன் சாய் சாய் என்று கூவி கொண்டே வந்தான் வேண்டுமா என்றான் எனக்கு வேண்டாமென்றேன் அவளும் வேண்டாமென்றாள் உடனே என்னை பார்த்து ஏன் டீ சாப்பிடவில்லையா என்றாள் எனக்கு டீ குடிக்கும் பழக்கம் இல்லை என்றேன் அவர்களை நான் எதுவும் கேட்கவில்லை அவள் மீண்டும் பேச ஆரம்பித்தாள் உங்கள் சீட் நெம்பர் இதுவா என்று சீட்டின் நெம்பரைக் காட்டி கேட்க எனக்கு ஒன்றும் புரியவில்லை எனக்கு தெரியாது என்று சொல்வதற்குள் உங்கள் டிக்கெட் ல் இருக்கும் என்றாள் நான் டிக்கெட்டை எடுத்து அவளிடம் நீட்டினேன் அதை பார்த்தவுடன் இது ஜெனரல் கம்பார்ட்மென்ட் டிக்கெட் நீங்கள் மாறி இதில் ஏறிவிட்டிர்கள் என்றாள் எனக்கு பகீரென்றது எதாவது பிரச்சினையா என்றேன் இங்கு செக்கிங் செய்பவர் வந்தால் பைன் போடுவார் என்றாள் சரி நான் அடுத்த  ஸ்டேசனில் இறங்கி மாறி கொள்கிறேன் என்றேன் அதற்க்கு அவள் நீங்கள் இறங்கவேண்டாம் அவரிடம் எக்ஸ்ட்ரா பணம் கோடுத்தால் டிக்கெட் கொடுத்துவிடுவார் கவலைபடாமல் உட்காருங்கள் அவர் வரட்டும் என்று பேசிக்கொண்டே எனக்கு சாப்பிட ஒரு தட்டில் சாதம் வைத்து என்னிடம் தட்டை நீட்டினாள்எனக்கு வேண்டாமென்று எவ்வளவோ சொல்லியும் அவர்கள் இருவரும் வற்புறுத்தி சாப்பிட வைத்தனர் நாங்கள் மூவரும் சாப்பிட்டவுடனேயே டிக்கெட் செக்கரும் வந்தார் அவரிடம் அந்த பெண்ணே பேசி டிக்கெட் வாங்கி கொடுத்தாள் இவள் அதிக தடவை இரயில் பயணம் செய்திருக்கிறாள் என்று அப்பொழுது தெரிந்து கொண்டேன் சிறிது நேரம் பேசிவிட்டு தூங்குவதற்கு ரெடியானோம் எதிர்ரெதிர் சீட்டில் நானும் அவளும் படுத்துக்கொண்டோம் அவளுக்கு மேல் சீட்டில் அவளது தம்பி படுத்துக் கொண்டான் அனைவரும் தூங்க ஆரம்பித்தோம் சுமார் மூன்று மணி இருக்கும் பொது நான் விழித்து கொண்டேன் என் கண்களை திறந்தவுடனேயே எனக்கு பெரிய அதிர்ச்சி .......................................................................................................................................
அன்பான அனைவருக்கும் என் அன்பு கலந்த வணக்கங்கள் இன்று முதல் தவறாமல் என் பதிவுகள் உங்களை தவறாமல் வந்தடையும் தயவு செய்து உங்கள் ஆதரவை நாடி நிற்கும் உங்கள் நண்பன் தயவு செய்து கருத்து கூறுங்கள் 

திங்கள், 30 ஆகஸ்ட், 2010

  1. சகோதரிஉன் கரம் பிடித்து நடந்து பழகிய நட்க்கள் உனக்கு மறந்திருக்கும்,ஆனால் எனக்கு மறக்கவில்லை,ஏனென்றால் நீயும் என் தாய் தானே,                                                                                        
அன்பே                       அன்பே ,உன்னில் நான் ஓராய்யிரம் முறை என் அன்பு என்ற விதைகளை விதைதிருப்பேன்,ஆனால்,அது துளிர்விடும் நேரத்தில் ஏன் கோபம் என்ற ஆசிட் ஊற்றி கொல்கிறாய்..........

சனி, 28 ஆகஸ்ட், 2010

என் அன்பான இதயங்களுக்கு என் அன்பு வணக்கங்கள் ,தயவு செய்து நீங்கள் என் பதிவை படித்துவிட்டு நிறை குறைகளை மறக்காமல் குறிப்பிடுங்கள் ......................................................... என் இதயம் பேசுகிறது...6                                                                                                                                      நான் கண்களை திறக்கிறேன் என் கண் முன்னால் ஒரு அழகான குழந்தை என்னை நோக்கி கையை அசைத்து கூப்பிடுகிறது என்ன ஒரு அருமையான பருவம் என்ன ஒரு அழகான சிரிப்பு கடவுளே என்னை அப்படியே குழந்தையாக மாற்றி விட மாட்டாயா என்று என் மனது தவியாய் தவித்தது அப்பொழுது கிடைத்த உண்மையான அன்பு மறுபடியும் கிடைக்காதா என்றபடியே அந்த குழந்தயை நோக்கி என் கை தானாக நீள்கிறது அதுவும் தாவி கொண்டு அம்மா என்னைபார்த்து ஆச்சர்யமாய் யாரிடமும் செல்லாது யாரும் தொட்டாலே அழுவும் ஆனால் உங்களிடம் தானாகவே வந்துவிட்டது என்று சொல்லும்போது எனக்கு பெருமையாய் இருந்தது அந்த குழந்தை என்னிடம் அமைதியாய் அமர்ந்து என் முகத்தை ஆழாமாய் ஒரு முறை பார்த்து சிரித்தது அந்த சிரிப்பு எத்தனை கோடி இருந்தாலும் அந்த சிரிப்புக்கு ஈடாகுமா என்று என் மனது நினைக்கிறது அது ஜன்னலின் வெளியே பார்க்கிறது ஆனால் வெளியே இருளாக இருந்தது ஆங்காங்கே ஒரு சில லைட்டின் வெளிச்சங்கள் மட்டுமே தெரிந்தது அதை பார்த்துக்கொண்டே ஜன்னல் வழியே வந்த காற்றில் அது ஆனந்தமாய் தூங்கிவிட்டது ஒரு மணி நேரம் சென்றவுடன் அவர்கள் இறங்கும் இடம் வந்துவிட்டது குழந்தையை என்னிடம் இருந்து அந்தம்மா எடுத்துகொண்டது என்னைவிட்டு உயிரை பிரித்தது போல ஒரு உணர்வு ஐந்து  நிமிடம் தொடர்ந்தது இது தான் அன்பு இதை நான் சொல்லும் பொது ஒரு சிலருக்கு கேலியாய் தெரியும் ஆனால் அதை அனுபவித்து பாருங்கள் புரியும் ஆனால் அதை காட்டமுடியாது சரி அவர்கள் இறங்கிவிட்டார்கள் நான் மீண்டும் என் கண்களை மூடிக்கொண்டேன் அங்கு இரயில் பத்து நிமிடம் நின்றது இரவு எட்டு மணி நான் சாப்பிட எதுவும் வாங்கவில்லை எனக்கு சாப்பிடும் எண்ணமே வரவில்லை என் வீட்டின் ஞாபகம் வந்ததினால் எதுவும் தோன்றவில்லை எங்கே செல்கிறோம் என்று சொல்லமுடியாமல் போகிறோமே என்ற கவலை மனதில் வாட்டியது நாளை காலையில் இரயில் நிற்கும்போது போன் செய்யலாம் என்று நினைத்து கொண்டு அமைதியாய் ஜன்னல் மீது சாய்ந்து கொண்டு  தூங்க ஆரம்பித்தேன் ஆனால் தூக்கம் வரவில்லை அப்பொழுது என் எதிரில் இடம் காலியாக இருந்தது என் காலை அந்த சீட்டின் மேல் வைத்து கொண்டேன் ஒரு ஐந்து நிமிடம் கழித்து ஒரு பெண்ணின் குரல் என்னருகே என் காலை எடுக்கச் சொல்லியது என் காலை எடுத்துக்கொண்டே என் கண்கள் அவளை நோக்கியது எனக்கு அப்படியே என்ன சொல்வதென்று தெரியவில்லை அவ்வளவு அழகு என் எதிரில் அமர்ந்தாள் அவளுடன் ஒரு பையனும் உடன் வந்திருந்தான் அவளுடைய தம்பியை போல் தெரிந்தான் உனக்கு எப்படி தெரியும் என்று நீங்கள் நினைப்பது எனக்கு தெரிகிறது அவன் அவளுடைய முக சாயலில் இருந்தான் அதனால் தான் எனக்கு உடனே தோன்றியது அப்படியே அவள் முகத்தை பார்த்தேன் அவள் நேராக என்னிடம் ...............    மீண்டும் சந்திப்போம்.

வெள்ளி, 27 ஆகஸ்ட், 2010

A Mother's Love

இது தான் முதல் அன்பு நாம் வெளியிடும் முதல் குரல், நம் தாயின் முதல் ஸ்பரிசம் நம் தாயின் முதல் முத்தம் அன்பென்றாலே ..............

வியாழன், 26 ஆகஸ்ட், 2010

என் இதயம் பேசுகிறது ...5                                                                                                                                                                                                                                                                            
                                                போன் ரிங் சென்று கொண்டிருந்தது,ஆனால் யாரும் எடுக்கவில்லை சொல்ல முடியவில்லையே என்ற ஏக்கத்துடன் புறப்பட்டுவிட்டேன்.நேராகமுதல் பிளாட்பார்மில் நின்று கொண்டிருந்த இரயிலை நோக்கி ஓடுகிறேன்,இரயில் புறப்பட தயாராகிறது நானும் ஏறிவிட்டேன் ஆனால் எந்த பெட்டியில் ஏறினேன் என்று எனக்கு தெரியவில்லை ,பிறகு தான் தெரிந்தது முன்பதிவு செய்யப்பட்ட பெட்டியில் ஏறிவிட்டேன் என்று, அதில் நிறைய இடங்கள் காலியாக இருந்தன நானும் ஜன்னல் ஓரத்தில் உள்ள இடமாகப் பார்த்து அமர்ந்து கொண்டேன் ஏன் என்றால் வெளியே பார்த்து கொண்டே செல்வதற்கு வசதியாக இருக்கும் அதனால் தான் இரயில் வேகம் அதிகமாக ஆரம்பித்தது என் இதயமும் வேகமாக துடிக்க ஆரம்பித்தது நம் பிறந்த மண்ணை விட்டு எதோ ஒரு வேகத்தில் புறப்பட்டுவிட்டோம் திரும்ப எப்பொழுது இந்த மண்ணை மிதிப்போம் என்று மனதில் ஒரு பயம் தோன்றி மறைந்தது.அமைதியாக என்கண்களை மூடிக்கொண்டேன் என் மேல் ஒரு கை தொடுகிறது அப்பொழுதுதான் என் கண்களை திறக்கிறேன் இரவு உணவு வேண்டுமா என்று கேட்கிறான் ஒருவன் அங்கேயே பதிவு செய்தால் உணவு நம்மை தேடி வந்து கொடுப்பார்கள் என்று எனக்கு அப்பொழுது தான் தேறியும் வேண்டாமென்று சொல்லிவிட்டு மீண்டும் கண்ணை மூடிக்கொண்டேன் அப்பொழுது திடீர் என்று என் கண்ணில் ஏதோ தென்பட்ட உணர்வு மீண்டும் கண்ணை திறக்கிறேன் என்  கண்ணில்.......................... மீண்டும் சந்திப்போம்  ..........................................................................................இந்த பதிப்பை படித்துவிட்டு தயவு செய்து உங்கள் கருத்துக்களை மறவாமல் பதியவும்  

செவ்வாய், 24 ஆகஸ்ட், 2010

 என் இதயம் பேசுகிறது -3 வாசக நெஞ்சங்களுக்கு என் அன்பு வணக்கங்கள் என் இடுகைகளை படித்துவிட்டு தயவு செய்து உங்கள் கருத்துக்களை மறவாமல் எழுதுங்கள் உங்கள் கருத்துக்களே எனக்கு நீங்கள் கொடுத்த மாபெரும் பொக்கிஷம் சரி ரொம்ப சோதிக்காமல் என் இதயம் பேசுகிறது  மூன்றாவது பதிப்பிற்கு செல்கிறேன்                                                                                                    நான் புறப்படுவதற்கான காரணம் சொல்லவேண்டுமென்றால்,என் பெற்றோர்கள் தான் என்னடா இது புது கதையாய் இருக்கிறது என்று யோசிக்கிரிர்களா ?அதுவும் அன்பினால் தான்,தயவு செய்து அதை வரும் நாட்களில் சொல்லுகிறேன் இப்பொழுது ஆரம்பித்தால் இதன் போக்கே மாறிவிடும்.                                                                                                                               நான் புறப்பட்டுவிட்டேன் என் முதலாளி அலுவலகத்தில் இருந்து இரயில் நிலையத்திற்கு  ஆள் கொண்டுவந்து விட்டார்,அவருக்கு நன்றி தெரிவித்து விட்டு நேராக                                                                நிலையத்திற்குள் நுழைகிறேன்.என் மனதில் ஒரு பக்கம் வருத்தம் ஒரு பக்கம் சந்தோசம் என் குடும்பத்தை விட்டு பிரிவது வருத்தம்,முதன் முதலாக இரயிலில் பயணம் அதுவும் இரண்டு நாட்கள் என் வாழ்க்கையின் முதல் பயணம் டிக்கட் கௌண்டர் வரிசையில் சென்று நின்றேன்,அங்கு எனக்கு தெரிந்த ஒருவராவது இருக்கிறார்களா என்று சுற்றும் தேடிப்பார்க்கிறேன் யாருமில்லை,சரி டிக்கெட்எடுத்துவிட்டு நேராக உள்ளே செல்ல முற்படும்போது,ஒரு ஞாபகம் வந்தது இரண்டு நாட்கள் போன் செய்ய முடியாது என்று பக்கத்தில் இருந்த டெலிபோன்                                                                                                       பூத்தில் நுழைந்து என் வீட்டிற்கு போன் செய்தேன் ரிங் போகிறது,ஆனால் யாரும் எடுக்கவில்லை முழு ரிங்கும் சென்று கட்டாகிவிட்டது,மீண்டும் முயற்சிக்கிறேன் ஆனால் யாரும் எடுக்கவில்லை அப்பொழுது நான் செல்ல வேண்டிய இரயில் இரயில் 
                                                        நிலையத்திற்குள் வந்துகொண்டிருக்கிறது என்று ஒலிப்பெருக்கியில் அறிவிக்கிறார்கள்,எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை இறுதியாக ஒருமுறை முயற்சி செய்கிறேன் ரிங் போகிறது போகிறது,போகிறது............................... ..............மீண்டும் சந்திப்போம்.................                                                                                                                                                                                             


திங்கள், 23 ஆகஸ்ட், 2010

என் இதயம் பேசுகிறது.2

என் இதயம் பேசுகிறது தொடர்ச்சி .2...                                                                                               நான் புறப்படுகிறேன், இன்னும் புறப்படவில்லையா என்று நீங்கள் கேட்பது எனக்கு கேட்கிறது, அதற்கு முன்னாள் என் குடும்பத்தை பற்றி சில ......என்ன பெரிய குடும்பம் பெரிய அரசியல் தலைவரா,அல்லது, பெரிய அறிவியல் மேதையா, அல்லது பெரிய நடிகரா, அவர்கள் குடும்பம் தான் சொன்ன உடனேயே ஞாபகம் வரும்,அந்த அளவுக்கு பெரிய ஆள் இல்லைனாலும் அவர்களைவிட சந்தோசமான குடும்பம் என் குடும்பம், ரொம்ப போர் அடிக்கிறேனா, மன்னித்துவிடுங்கள்,பெரிய குடும்பம் அல்ல நான் ஒருவன் மட்டுமே என் குடும்பத்தின் சொத்து,                                                      என் தந்தை தாய் இருவர்க்கும் செல்லபிள்ளை,என் உடன் பிறப்புகள் யாரும் இல்லை என்பதை விட,நான் மட்டுமே போதும் என்று என் பெற்றோர்களின் விருப்பமும் ஆசையும் கூட,அதனால் தான் எனக்கு அணைத்து பாசங்களையும் ஊட்டி வளர்த்தார்கள் ,எங்கள் குடும்பத்தில் மொத்தம் ஐந்து பேர் என் தாதா பாட்டி அப்பா அம்மா நான் ,எங்கள் குடும்பம் விவசாய குடும்பம்,                                             மற்ற சொந்தங்களை பற்றி வரும் பாகங்களில்  கூறுகிறேன்.சரி நான் வீட்டில் இருந்து  புறப்பட்டு விட்டேன், அம்மாவிடம் நான் நமக்காக தான்   செல்கிறேன்,என்னை தடுக்கவேண்டாம் என்று கூறிவிட்டு நேராக                                                                தூரத்து உறவினர் ஒருவரின் வீட்டிற்கு சென்றேன்.அவரிடம் முன்பே சொல்லியதின் மூலம் ஒரு தனியார்  போக்குவரத்துக்கு மேலாளராக எனக்கு வேலை கிடைத்தது.அதுவும் என் ஊரிலிருந்து இரண்டாயிரம் கிலோமீட்டர் தூரத்திற்கு அப்பால் செல்லவேண்டும்.மொழி தெரியாத ஒரு இடத்திற்கு செல்லவேண்டும்.ஆனால் நான் எதற்கும் தயாராக இருந்தேன்.எப்படி இந்த வயதில் இப்படி ஒரு பதவி கிடைத்தது என்று நீங்கள் நினைப்பது எனக்கு தெரிகிறது.என் உறவினரின் சிபாரிசுக்கு அப்படிஒரு மரியாதை,  மனதை கால்லாக்கி கொண்டு என்னை பதினேழு ஆண்டுகள் பிரியாமல்  வளர்த்த என் பெற்றோர்களை விட்டு நான்  புறப்பட்டுவிட்டேன்.                                                                                                          நான் புறப்படுகிறேன் அதற்க்கான காரணம் நாளை ...........................................       

ஞாயிறு, 22 ஆகஸ்ட், 2010

என் இதயம் பேசுகிறது

  நான் எங்கோ செல்கிறேன் என்று சொல்லிவிட்டு கோபமாக செல்கிறேன் எங்கே என்று என் தாய் கேட்க எனக்கு  சொல்ல தெரியவில்லை ,தெரிந்தால் தானே சொல்வதற்கு ,எனக்கு  வயது 17 பனிரண்டாம் வகுப்பு முடித்துவிட்டு தான் இனி இந்த தாய் தகப்பனுக்கு சுமையாய் இருக்காமல் என் வழியில் சென்று நம் குடும்பத்தை காப்பாற்ற எனக்குள் தோன்றிய எண்ணம் குடும்பத்தை காப்பாற்ற என்றால் ஊரிலேயே உயர்ந்த குடும்பமாய் அதுதான் பல சினிமா  படங்களில் காட்டுற மாதிரி நல்லா வரணும்னு நினைத்து தான் நானும் கிளம்புகிறேன் ...............                                                    நாளை தொடரும் 

வெள்ளி, 20 ஆகஸ்ட், 2010

அன்பு

அன்பு   நாட்கள் பறந்தன. ராஜாவைச் சுற்றி ஒரு கூட்டம் கூடிக்கொண்டே இருந்தது. பத்து நாட்கள் வரைதான் ராஜாமோகம் அதிகமாக இருந்தது. பிறகு ஒவ்வொருவராக சோமுவைச் சுற்றத் தொடங்கினர். ராஜா தன் கையில் பிஸ்கட் சாக்லேட் என்று வைத்துக்கொண்டு கூப்பிட்டாலும் ஒதுங்கிச் சென்றனர்.ஏனென்று ராஜாவுக்கு விளங்கவில்லை.அவன் நண்பன் நாணாவைப் பார்த்து,"ஏண்டா நாணா! ஏன் சீனு, ரமேஷ், பாலு, ரங்கன் இவங்கெல்லாம் என்னை விட்டுவிட்டுப் போயிட்டாங்க. எவ்வளவு தின்பண்டம் வாங்கித்தந்தேன்?

இன்னும் என்ன வேணும்னாலும் வாங்கித்தரேன்னு சொல்லு. அவங்களையெல்லாம் கூட்டிட்டு வாடா!" என்றான் படபடப்பாக.

நாணா அலட்சியமாகப் பதில் சொன்னான்."போனாப்போறாங்க விடு.நாம ரெண்டு மூணு பேருதான் இருக்கோமே ஜாலியா இருக்கலாம் நீ ஏண்டா கவலைப் படுறே?"

அவன் கையில் ராஜா வாங்கிக் கொடுத்த ஐஸ் உருகி கை வழியே வழிய அதை வேக வேகமாக நாவால் நக்கியபடி பதிலளித்தான் நாணா. ராஜாவை கவலை லேசாக சூழத் தொடங்கியது. எப்படியாவது சோமுவிடம் அதிக நண்பர்கள் சேராமல் செய்து விட வேண்டும் என்ற எண்ணம் அவனை இரவு முழுவதும் தூங்க விடாமல் செய்தது.

ராஜா அன்று பள்ளிவிட்டு வரும்போதும் தன் நண்பன் நாணாவைச் சந்தித்தான். அவனுடன் ஆலோசனை செய்தபடி நடந்தான். நாணா சொன்னபடியே மறுநாள் சோமுவின் புத்தகப் பையைத் திருடி எடுத்துப் போய் பள்ளித் தோட்டத்துக் கிணற்றில் போட்டுவிட்டான். புத்தகப்பையைக் காணாத சோமு மிகவும் வருத்தத்துடன் வீட்டுக்கு வந்தான்.

அவனுடன் வந்த அவன் நண்பர்கள் ஒவ்வொருவரும்,"கவலைப் படாதே சோமு! உனக்கு என்னென்ன புத்தகம் தேவையோ அதை நாங்கள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு புத்தகமாக நாங்கள் தருகிறோம். நீயும் படித்துப் புரிந்து கொண்டு எங்களுக்குச் சொல்லிக் கொடு. உன்னிடம் பாடம் கேட்கும்போது நன்றாகப் புரிவதோடு பயப்படாமல் சந்தேகங்களையும் கேட்டுக் கொள்ள முடிகிறது." எனக் கூறியபோது சோமு அனைவருக்கும் நன்றி சொல்லி அனுப்பி வைத்தான்.

நாட்கள் கடந்தன , இன்னும் பத்து நாட்களே ஆண்டுதேர்வுக்கு இருந்தன. சோமுவின் புத்தகங்கள் தொலைந்து போனதால் மாணவர்கள் தரும் புத்தகங்களை கடனாகப் பெற்றுப் படித்த சோமு இன்னும் அதிக கவனத்துடன் படித்தான். படித்ததை தன் நண்பர்களுக்கு அவர் கேட்கும்போதெல்லாம் விளக்கி சொன்னான். சோமுவின் பாடம் சொல்லும் முறைக்க்காகவும் அவனது நல்ல பண்பிர்க்காகவும் வகுப்பில் பாதிபேருக்கு மேல் சோமுவின் வீட்டில் மாலை நேரங்களில் கூடதொடங்கினர். அவரவருக்குத் தேர்வில் வெற்றிபெரவேண்டுமே என்ற கவலை வந்துவிட்டது .

அன்று மாலை ஆறு மணியிருக்கும். கணிதப்பாடத்தில் கடினமான கணக்கை விளக்கி சொல்லிகொண்டிருந்த சோமு அவன் பெயர் சொல்லி பெரியவர் அழைப்பதைப் பார்த்து எழுந்து நின்றான் .ராஜாவும் அவன் அப்பாவும் நின்றுருப்பதைப் பார்த்து கைகுவித்து அவருக்கு வணக்கம் சொன்னான். அங்கிருந்த ஒரு கிழிந்த பாயை மடித்துப் போட்டு அவரை அமரசொல்லி உபசரித்தான். அவன் அம்மா உள்ளே இருந்து நீர் மோர் கொண்டுவந்து கொடுத்து உபசரித்தாள். ராஜா நாணித் தலை குனிந்து நின்றிருந்தான். பெரியவர் பெரியசமியே பேசினார்.

"தம்பி சோமு! இதனை பைய்யங்கள் உங்க வீட்லயே இருக்கங்களே. அவங்களையெல்லாம் நீயே வீட்டுக்கு வாங்கனு கூப்பிடியா? அல்லது அவங்களாவே உன்னைத் தேடி வந்தாங்களா?"
அருகே நின்றிருந்த ரங்கன் , "நாங்களாதான் வந்தோங்க" என்றபோது கணக்கை போட்டு கொண்டிருந்த ரமேஷ் நிமிர்ந்தான். அவன் முகம் மகிழ்ச்சியால் மலர்ந்திருந்தது.

"சோமு! இப்போ செரியாப் போட்டுட்டேன் பார். விடை வந்திடுச்சு." கைகொட்டி மகிழ்ச்சி ஆரவாரத்துடன் சொன்னபடியே நிமிர்ந்தவன் பெரியவரை பார்த்து மௌனமானான். நோட்டை மட்டும் சோமுவிடம் தந்தான்.அதை வாங்கி பார்த்தார் பெரியசாமி. அதில் சோமு சொல்லிக் கொடுத்த கணக்குகள் எழுதப்படிருந்தன.

"இத்தனை பேர் உன் வீட்டிலே இருக்கிறார்களே! இவங்களோட பெற்றோர் இவங்களைத் திட்ட மாட்டாங்களா?" என்று சொன்னபோது , ரங்கன் இடைமறித்தான் ."எங்கள் வீட்டிலெல்லாம் பத்திரமா போய்வானு அனுப்புவாங்க."

பெரியசாமி தன் மகனைத் திரும்பிப் பார்த்துவிட்டு ஒரு பையனைக் கேட்டார். "ஏன் தம்பி! உனக்கு வாத்தியார் சொல்லிதருவதில்லையா? ஏன் சோமுவிடம் வந்து படிக்கிறாய்?"

"வாத்தியாரை விட சோமு சொல்றது நல்லாப் புரியுது. அதோட சந்தேகம் வந்தாலும் பயமில்லாம, தைரியமா கேக்க முடியுது. அதனால எங்க வீட்டிலெல்லாம் சோமு வீட்டுக்கு போனாதான் படிப்பே " ன்னு சொல்லி அனுப்பிடுவாங்க.

"ஐயா! எனக்கு தெரிஞ்சதை என் நண்பர்களுக்கு விளக்கி சொல்றதாலே எனக்கும் மறக்காம இருக்கு. பரீட்சையிலே நல்லா எழுத முடியுது. அதனால் கேக்குறவங்களுக்கு நான் மறுக்காம சொல்லி தர்றேன் . எல்லாரும் என் கூடவே மாலை நேரத்திலே கொஞ்சநேரம் விளையாடிட்டு எங்க வீட்டுலே கூடிப் படிப்பாங்க. வேற காரணம் எதுவுமில்லே ஐயா" பணிவுடன் சோமு கூறவே பெரியசாமி அவனைப் பார்த்து அன்புடன் புன்னகைத்தார்.

அவனை அருகே அழைத்து அன்புடன் அவனைத் தடவிக் கொடுத்தார். " சோமு, நீ ஏழை இல்லேப்பா, பெரிய பணக்காரன். அறிவும் பணிவும் யார்கிட்ட இருக்குதோ அவன்தான் செல்வம் உடையவன். யார்கிட்ட பிறருக்கு உதவணும் என்கிற எண்ணம் இருக்கோ அவனே உயர்ந்தவன். நீ உயர்ந்தவன் , செல்வந்தன். இனி நீயும் எனக்கு ஒரு மகன்போலதான். ராஜா! நீ சொன்னபடி சோமுகிட்ட மன்னிப்புக்கேள். போட்டியிலே நீ தோத்துட்டே" என்றபோது சோமு ஒன்றும் புரியாமல் திகைத்தான். "ஐயா! என்கிட்டே ராஜா ஏன் மன்னிப்பு கேட்கணும்னு சொல்றீங்க. அவன் எந்த தப்பும் பண்ணலியே" என்றான்.

"உனக்குத் தெரியாது சோமு, உன் புத்தகப்பைய்யை இவன் கூட்டாளி நாணா கூட சேர்ந்துகிட்டு கிணத்துக்குள்ளே போட்டுட்டு உன்னைப் படிக்கவிடாம செய்யப் பார்த்தாங்க. ஆனா அதுவும் நடக்கல", என்று சொல்லிவிட்டு ராஜாவைப் பார்த்தார். கண்டிப்புடன் பார்த்த அவரது ஆணையை மீற முடியாமல் சோமுவின் கையயைப் பற்றிக் கொண்டான் ராஜா. அவன் தோள் மீது கை போட்டு அணைத்துக் கொண்ட சோமுவைக் கண்டு பெருமையுடன் சிரித்தார் பெரியசாமி. தன் மகன் திருந்திவிட்டான் என்ற மகிழ்ச்சி அவர் முகத்தில் தெரிந்தது.

செவ்வாய், 17 ஆகஸ்ட், 2010


                அன்பு என்றாலே முதல் தெய்வம் அம்மாவே
அன்பு காட்டுங்கள்                                                                                                              
உ‌ங்க‌ள் குழ‌ந்தை‌யிட‌ம் க‌ண்டி‌ப்பை ‌விட அ‌திகமாக அ‌ன்பு கா‌ட்டு‌ங்க‌ள்.

அ‌ன்பை எ‌ந்த வ‌ற்புறு‌த்தலு‌ம் இ‌ல்லாம‌ல் வெ‌ளி‌ப்படு‌த்து‌ங்க‌ள். குழ‌ந்தை‌யிட‌ம் இரு‌ந்து வரு‌ம் அ‌ன்பை முழுதாக ஏ‌ற்று‌க் கொ‌ள்ளு‌ங்க‌ள்.

அவ‌ர்க‌ள் ‌மீது ‌நீ‌ங்க‌ள் கொ‌ண்டிரு‌க்கு‌ம் அ‌ன்பை அ‌வ்வ‌ப்போது வா‌ர்‌‌த்தைகளா‌ல், செயலா‌ல் வெ‌ளி‌ப்படு‌த்து‌ங்க‌ள்.

அ‌ன்பு அனை‌த்தையு‌ம் பொறு‌த்து‌க் கொ‌ள்ளு‌ம், அ‌ன்பு அனை‌த்தையு‌ம் ந‌ம்பு‌ம், அ‌ன்பு எத‌ற்கு‌ம் அடிப‌ணியு‌ம். எனவே உ‌ங்க‌ள் குழ‌ந்தையு‌ம் ‌நீ‌ங்களு‌ம் அ‌ன்பு எனு‌ம் ஒரு வ‌ட்ட‌த்‌‌தி‌ற்கு‌ள் ‌சி‌க்‌கி‌க் கொ‌ள்வது ந‌ல்லது.

எதையு‌ம் அ‌ன்பாக‌க் கூறுவத‌ன் மூல‌ம் ந‌ல்ல‌ப் பலனை அடையலா‌ம். அதே‌ப்போல அவ‌ர்க‌ள் செ‌ய்யு‌ம் தவறுகளை க‌ண்டி‌க்காம‌ல், எடு‌த்து‌க் கூறு‌ங்க‌ள். ‌மீ‌ண்டு‌ம் தவறு செ‌ய்யாம‌ல் இரு‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்பதை‌யு‌ம் அ‌ன்புட‌ன் எ‌ச்ச‌ரியு‌ங்க‌ள்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...