வியாழன், 26 ஆகஸ்ட், 2010

என் இதயம் பேசுகிறது ...5                                                                                                                                                                                                                                                                            
                                                போன் ரிங் சென்று கொண்டிருந்தது,ஆனால் யாரும் எடுக்கவில்லை சொல்ல முடியவில்லையே என்ற ஏக்கத்துடன் புறப்பட்டுவிட்டேன்.நேராகமுதல் பிளாட்பார்மில் நின்று கொண்டிருந்த இரயிலை நோக்கி ஓடுகிறேன்,இரயில் புறப்பட தயாராகிறது நானும் ஏறிவிட்டேன் ஆனால் எந்த பெட்டியில் ஏறினேன் என்று எனக்கு தெரியவில்லை ,பிறகு தான் தெரிந்தது முன்பதிவு செய்யப்பட்ட பெட்டியில் ஏறிவிட்டேன் என்று, அதில் நிறைய இடங்கள் காலியாக இருந்தன நானும் ஜன்னல் ஓரத்தில் உள்ள இடமாகப் பார்த்து அமர்ந்து கொண்டேன் ஏன் என்றால் வெளியே பார்த்து கொண்டே செல்வதற்கு வசதியாக இருக்கும் அதனால் தான் இரயில் வேகம் அதிகமாக ஆரம்பித்தது என் இதயமும் வேகமாக துடிக்க ஆரம்பித்தது நம் பிறந்த மண்ணை விட்டு எதோ ஒரு வேகத்தில் புறப்பட்டுவிட்டோம் திரும்ப எப்பொழுது இந்த மண்ணை மிதிப்போம் என்று மனதில் ஒரு பயம் தோன்றி மறைந்தது.அமைதியாக என்கண்களை மூடிக்கொண்டேன் என் மேல் ஒரு கை தொடுகிறது அப்பொழுதுதான் என் கண்களை திறக்கிறேன் இரவு உணவு வேண்டுமா என்று கேட்கிறான் ஒருவன் அங்கேயே பதிவு செய்தால் உணவு நம்மை தேடி வந்து கொடுப்பார்கள் என்று எனக்கு அப்பொழுது தான் தேறியும் வேண்டாமென்று சொல்லிவிட்டு மீண்டும் கண்ணை மூடிக்கொண்டேன் அப்பொழுது திடீர் என்று என் கண்ணில் ஏதோ தென்பட்ட உணர்வு மீண்டும் கண்ணை திறக்கிறேன் என்  கண்ணில்.......................... மீண்டும் சந்திப்போம்  ..........................................................................................இந்த பதிப்பை படித்துவிட்டு தயவு செய்து உங்கள் கருத்துக்களை மறவாமல் பதியவும்  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...