சனி, 28 ஆகஸ்ட், 2010

என் அன்பான இதயங்களுக்கு என் அன்பு வணக்கங்கள் ,தயவு செய்து நீங்கள் என் பதிவை படித்துவிட்டு நிறை குறைகளை மறக்காமல் குறிப்பிடுங்கள் ......................................................... என் இதயம் பேசுகிறது...6                                                                                                                                      நான் கண்களை திறக்கிறேன் என் கண் முன்னால் ஒரு அழகான குழந்தை என்னை நோக்கி கையை அசைத்து கூப்பிடுகிறது என்ன ஒரு அருமையான பருவம் என்ன ஒரு அழகான சிரிப்பு கடவுளே என்னை அப்படியே குழந்தையாக மாற்றி விட மாட்டாயா என்று என் மனது தவியாய் தவித்தது அப்பொழுது கிடைத்த உண்மையான அன்பு மறுபடியும் கிடைக்காதா என்றபடியே அந்த குழந்தயை நோக்கி என் கை தானாக நீள்கிறது அதுவும் தாவி கொண்டு அம்மா என்னைபார்த்து ஆச்சர்யமாய் யாரிடமும் செல்லாது யாரும் தொட்டாலே அழுவும் ஆனால் உங்களிடம் தானாகவே வந்துவிட்டது என்று சொல்லும்போது எனக்கு பெருமையாய் இருந்தது அந்த குழந்தை என்னிடம் அமைதியாய் அமர்ந்து என் முகத்தை ஆழாமாய் ஒரு முறை பார்த்து சிரித்தது அந்த சிரிப்பு எத்தனை கோடி இருந்தாலும் அந்த சிரிப்புக்கு ஈடாகுமா என்று என் மனது நினைக்கிறது அது ஜன்னலின் வெளியே பார்க்கிறது ஆனால் வெளியே இருளாக இருந்தது ஆங்காங்கே ஒரு சில லைட்டின் வெளிச்சங்கள் மட்டுமே தெரிந்தது அதை பார்த்துக்கொண்டே ஜன்னல் வழியே வந்த காற்றில் அது ஆனந்தமாய் தூங்கிவிட்டது ஒரு மணி நேரம் சென்றவுடன் அவர்கள் இறங்கும் இடம் வந்துவிட்டது குழந்தையை என்னிடம் இருந்து அந்தம்மா எடுத்துகொண்டது என்னைவிட்டு உயிரை பிரித்தது போல ஒரு உணர்வு ஐந்து  நிமிடம் தொடர்ந்தது இது தான் அன்பு இதை நான் சொல்லும் பொது ஒரு சிலருக்கு கேலியாய் தெரியும் ஆனால் அதை அனுபவித்து பாருங்கள் புரியும் ஆனால் அதை காட்டமுடியாது சரி அவர்கள் இறங்கிவிட்டார்கள் நான் மீண்டும் என் கண்களை மூடிக்கொண்டேன் அங்கு இரயில் பத்து நிமிடம் நின்றது இரவு எட்டு மணி நான் சாப்பிட எதுவும் வாங்கவில்லை எனக்கு சாப்பிடும் எண்ணமே வரவில்லை என் வீட்டின் ஞாபகம் வந்ததினால் எதுவும் தோன்றவில்லை எங்கே செல்கிறோம் என்று சொல்லமுடியாமல் போகிறோமே என்ற கவலை மனதில் வாட்டியது நாளை காலையில் இரயில் நிற்கும்போது போன் செய்யலாம் என்று நினைத்து கொண்டு அமைதியாய் ஜன்னல் மீது சாய்ந்து கொண்டு  தூங்க ஆரம்பித்தேன் ஆனால் தூக்கம் வரவில்லை அப்பொழுது என் எதிரில் இடம் காலியாக இருந்தது என் காலை அந்த சீட்டின் மேல் வைத்து கொண்டேன் ஒரு ஐந்து நிமிடம் கழித்து ஒரு பெண்ணின் குரல் என்னருகே என் காலை எடுக்கச் சொல்லியது என் காலை எடுத்துக்கொண்டே என் கண்கள் அவளை நோக்கியது எனக்கு அப்படியே என்ன சொல்வதென்று தெரியவில்லை அவ்வளவு அழகு என் எதிரில் அமர்ந்தாள் அவளுடன் ஒரு பையனும் உடன் வந்திருந்தான் அவளுடைய தம்பியை போல் தெரிந்தான் உனக்கு எப்படி தெரியும் என்று நீங்கள் நினைப்பது எனக்கு தெரிகிறது அவன் அவளுடைய முக சாயலில் இருந்தான் அதனால் தான் எனக்கு உடனே தோன்றியது அப்படியே அவள் முகத்தை பார்த்தேன் அவள் நேராக என்னிடம் ...............    மீண்டும் சந்திப்போம்.

4 கருத்துகள்:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...