செவ்வாய், 31 ஆகஸ்ட், 2010

என் இதயம் பேசுகிறது .7 சகஜமாக நீங்க இங்க தான் இரயில் ஏறுநீர்களா என்று கேட்டாள் எனக்கு உடனே பதில் சொல்வதற்கு இயலவில்லை முன் பின் இப்படி சகஜமாக என்று நினைத்து விட்டு பின்னர் இல்லை என்று ஒற்றை வார்த்தை மட்டும் பதிலாக கூறினேன் ,உடனே எங்கிருந்து வருகிறிர்கள் என்றாள் நான் அமைதியாக ஏன் என்றேன் இல்லை உங்களை பார்த்தவுடன் முன்பே பார்த்த ஞாபகம் அதனால் தான் என்றாள் நான் எனது ஊரின் பெயரை கூறினேன் சிறிது நேரம் அமைதி அந்த அமைதியை கலைக்கும் விதமாக ஒரு டீ விற்பவன் சாய் சாய் என்று கூவி கொண்டே வந்தான் வேண்டுமா என்றான் எனக்கு வேண்டாமென்றேன் அவளும் வேண்டாமென்றாள் உடனே என்னை பார்த்து ஏன் டீ சாப்பிடவில்லையா என்றாள் எனக்கு டீ குடிக்கும் பழக்கம் இல்லை என்றேன் அவர்களை நான் எதுவும் கேட்கவில்லை அவள் மீண்டும் பேச ஆரம்பித்தாள் உங்கள் சீட் நெம்பர் இதுவா என்று சீட்டின் நெம்பரைக் காட்டி கேட்க எனக்கு ஒன்றும் புரியவில்லை எனக்கு தெரியாது என்று சொல்வதற்குள் உங்கள் டிக்கெட் ல் இருக்கும் என்றாள் நான் டிக்கெட்டை எடுத்து அவளிடம் நீட்டினேன் அதை பார்த்தவுடன் இது ஜெனரல் கம்பார்ட்மென்ட் டிக்கெட் நீங்கள் மாறி இதில் ஏறிவிட்டிர்கள் என்றாள் எனக்கு பகீரென்றது எதாவது பிரச்சினையா என்றேன் இங்கு செக்கிங் செய்பவர் வந்தால் பைன் போடுவார் என்றாள் சரி நான் அடுத்த  ஸ்டேசனில் இறங்கி மாறி கொள்கிறேன் என்றேன் அதற்க்கு அவள் நீங்கள் இறங்கவேண்டாம் அவரிடம் எக்ஸ்ட்ரா பணம் கோடுத்தால் டிக்கெட் கொடுத்துவிடுவார் கவலைபடாமல் உட்காருங்கள் அவர் வரட்டும் என்று பேசிக்கொண்டே எனக்கு சாப்பிட ஒரு தட்டில் சாதம் வைத்து என்னிடம் தட்டை நீட்டினாள்எனக்கு வேண்டாமென்று எவ்வளவோ சொல்லியும் அவர்கள் இருவரும் வற்புறுத்தி சாப்பிட வைத்தனர் நாங்கள் மூவரும் சாப்பிட்டவுடனேயே டிக்கெட் செக்கரும் வந்தார் அவரிடம் அந்த பெண்ணே பேசி டிக்கெட் வாங்கி கொடுத்தாள் இவள் அதிக தடவை இரயில் பயணம் செய்திருக்கிறாள் என்று அப்பொழுது தெரிந்து கொண்டேன் சிறிது நேரம் பேசிவிட்டு தூங்குவதற்கு ரெடியானோம் எதிர்ரெதிர் சீட்டில் நானும் அவளும் படுத்துக்கொண்டோம் அவளுக்கு மேல் சீட்டில் அவளது தம்பி படுத்துக் கொண்டான் அனைவரும் தூங்க ஆரம்பித்தோம் சுமார் மூன்று மணி இருக்கும் பொது நான் விழித்து கொண்டேன் என் கண்களை திறந்தவுடனேயே எனக்கு பெரிய அதிர்ச்சி .......................................................................................................................................
அன்பான அனைவருக்கும் என் அன்பு கலந்த வணக்கங்கள் இன்று முதல் தவறாமல் என் பதிவுகள் உங்களை தவறாமல் வந்தடையும் தயவு செய்து உங்கள் ஆதரவை நாடி நிற்கும் உங்கள் நண்பன் தயவு செய்து கருத்து கூறுங்கள் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...