திங்கள், 27 செப்டம்பர், 2010

உயிரே...

 காலையில் என் இரு சக்கர வாகனத்தில் என் நண்பருடன் அவரது அலுவலகத்துக்கு சென்று அலுவலக வாயிலில் வாகனத்தை நிறுத்திவிட்டு உள்ளே சென்று அமர்ந்தோம்அது ஒரு முக்கியமான  போக்குவரத்து சாலை சாலையின் ஓரத்திலேயே அலுவலகம் இருந்தது  திடீரென்று ஒரு சத்தம் கேட்டது  சிலர் வேகமாக சிலர் ஓடினார்கள்  என்ன நடக்கிறது கூட்டமாக இருக்கிறது என்று சென்று பார்த்தால் அங்கே ஒருவர் அடிபட்டுகிடக்கிறார் அவர் வந்த இரண்டு சக்கர வாகனத்தில் ஏதோ ஒரு வாகனம் இடித்து சென்றுவிட்டது நாற்ப்பது வயது மதிக்கத்தக்க ஒருவர் கீழே கிடக்கிறார் அவர் வாயிலிருந்து இரத்தம் வருகிறது அவரிடம் எந்த அசைவும் இல்லை, அவரை சுற்றி கூட்டம் கூடியதே தவிர யாரும் அவர் என்ன நிலையில் இருக்கிறார் என்று யாருமே நெருங்கவில்லை நான் நேராக அவர் மூக்கின் அருகே என் விரலை வைத்துப் பார்த்தேன் உயிர்  இருக்கிறது
என்று தெரிந்தவுடன் என் நண்பனிடம்உடனே போன் செய்தால் அவரைகாப்பாற்றிவிடலாம் என்று கூறிக்கொண்டே நேராக அலுவலகம் சென்று ஆம்புலன்சுக்கு போன் செய்து விஷத்தை கூறினேன் ஆனால் அவர்கள் சொன்ன பதில் நாங்கள் பக்கத்துக்கு ஊருக்கு முதல்வர் வந்திருப்பதால் அங்கிருக்கிறோம் நிகழ்ச்சி முடிந்தவுடன் வருகிறோம் என்று சர்வ சாதரணமாக கூறினார்கள்   அடுத்து உடனே தீயணைப்பு நிலையத்திற்கு தொடர்பு கொண்டால் அதே பதில் ,அடுத்து  காவல் நிலையத்துக்கு தொடர்பு கொண்டால் அங்கிருந்து வந்த பதிலும் அதே தான் சரி இப்பொழுது என்ன செய்வது நாம் எடுத்து சென்றாலும் பிரச்சினையை சந்திக்கவேண்டும் நம் நாட்டு சட்டம் தான் மிக அருமையாக உதவி செய்பவர்களே குற்றவாளிகளாக தண்டிக்கப்படும் நிலைமை உள்ளதே என்று ஒரு இரண்டு நிமிடம் யோசித்துவிட்டு மாவட்ட காவல் துறை ஆணையாளருக்கு தொடர்பு கொண்டேன் அவருடைய தொடர்பு உடனடியாக கிடைத்தது அவரிடம்  விளக்கத்தை சொன்னவுடன் உடனே நடவடிக்கை எடுப்பதாக கூறினார் ,பத்து நிமிடம் கழிந்தது எதுவும் வரவில்லை அவரும் அதே விழாவில் தான் இருந்தார் இன்னும் பத்து நிமிடம் பார்ப்போம் என்று மீண்டும் அவர் விழுந்த இடத்தை நோக்கி சென்று பார்த்தோம் அவர் பாக்கெட்டில் இருந்து பத்து ரூபாய் நோட்டு ஒன்றும் பீடி கட்டு ஒன்றும் அந்த இரத்ததின் அருகில் முன்னர் பார்க்கும்போது கிடந்தது அதைக் காணவில்லை அடக் கொடுமையே இப்படியும் சில பிறவிகளா ,ஒரு உயிர் துடித்துகொண்டிருக்கிறது அதை பற்றி எந்த ஒரு உணர்வும் இல்லாமல் இதைக்கூட திருடும் மனிதமிருகம் இந்த பூமிக்கு தேவையா என்று மனது கனத்தது அந்த சமையத்தில் சைரன் ஒலி கேட்டது சரி வந்துவிட்டார்கள் என்று ஒரு நிம்மதி எப்படியாவது அந்த உயிர் காப்பற்றபடவேண்டும் என்ற கவலை மறுபுறம் வாகனம் வந்து நின்றவுடன் இறங்கி வந்தவர் நேராக கூட்டத்தை பார்த்து கேட்ட முதல் கேள்வி யார் போன் செய்தது என்று தான் இதிலிருந்து என்ன தெரிகிறது சாதாரண நிலையில் இருக்கும் மனிதனின் உயிர் ஒரு வசதி படைத்த வீட்டில் இருக்கும் நாயின் உயிரைவிட மதிப்பு குறைவானது தான் என்று எங்களுக்குள் கூறிக்கொண்டு அவர் கேட்ட கேள்விக்கு யாரும் பதில் சொல்லவில்லை அவர் திட்டிக்கொண்டே அவரை எடுத்து சென்றனர் பின்னர் அவர் காப்பற்றப்பட்டாரா இல்லையா என்று தெரிந்துகொள்வதர்க்காக நாங்களும் ஒரு மணி நேரம் கழித்து அரசு பொது மருத்துவமனைக்கு சென்று விசாரித்து பார்த்தபோது காப்பாற்றப்பட்டார் என்று தெரிந்தவுடன் அளவுகடந்த மகிழ்ச்சியாய் இருந்தது ஆனால் இந்த அதிகாரிகளுக்கு ஏன் இப்படி மனம் கல்லாகிவிட்டது ஒரு முதலமைச்சரின் உயிர் அமைச்சர்கள் உயிர்  அதிகாரிகள் உயிர் மக்களின் உயிர் என்று உயிர்களில் ஏதேனும் வித்தியாசம் உண்டா ஒரு தடவை தான் இந்த மனிதப்பிறப்பு ஒரு முறை இந்த உடலில் இருந்து பிரிந்துவிட்டால் அந்த மனிதனை சார்ந்த எத்தனை உறவுகள் பாதிக்கப்படுகிறது என்று அவரவர்கள் அனுபவிக்கும் போது புரியும் சாதரணமாக பேசும்போது அதன் வேதனை தெரியாது தயவு செய்து ஒரு நிமிடம் சிந்தித்துப்பாருங்கள் உயிரின் மதிப்பு இவ்வளவுதானா ?..........................?.....................?இதை படிப்பதோடு இல்லாமல் உங்கள் கருத்துக்களைக் கூறுங்கள்,அது மற்றவர்களுக்கு ஒரு உதாரணமாக இருக்கும்.........இன்னும் தொடரும்

2 கருத்துகள்:

  1. மனித உயிர்கள் இறந்து கொண்டிருக்கிறதோஇல்லையோ உணர்வுகள் இறந்துக்கொண்டிருக்கிறது

    பதிலளிநீக்கு
  2. இது வருந்த தக்க மற்றும் கண்டிக்க தக்க சம்பவம், படிக்கும் எனக்கே மனம் கனக்கிறது, நேரில் பார்த்த உங்களுக்கு இன்னும் அந்த துயர சம்பவம் உங்கள் மனதை விட்டு அகன்று இருக்காது என்று எண்ணுகிறேன். உங்களின் ஒவ்வொரு முயற்சியும் தோல்வி அடைந்தும் மனம் தளராது அவ் உயிரை காப்பாற்றியதருக்கு நன்றி மற்றும் வாழ்த்துக்கள். உங்களை போன்றோர்களால் தான் இன்னும் இந்த உலகம் இயங்குகிறது.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...