வியாழன், 7 அக்டோபர், 2010

என் உயிரே எங்கே சென்றாய் ?

ஏன் இப்படி ஒரு அதிர்ச்சி எதற்கு இவ்வளவு பெரிய துன்பம், எதற்காக கொடுத்தாய் எதற்கு இப்படி பரித்துகொண்டாய், எங்களுக்கு இந்த பாசப்பிணைப்பை கொடுத்து உரு தெரியாமல் அழிக்கவா?                                                                                                                                                                         ஒவ்வொரு உயிர் பிறக்கும்போது கொடுத்த சந்தோசத்தை விட அது போகும்போது இருக்கும் துன்பம் இருக்கிற கொடுமை மிக மிக கொடியது என்னை பெற்ற தாய் தந்தை  என்னை குழந்தையாய் அவர்கள் கையில் தவழும்போது எத்தனை சந்தோசம் அவர்களுக்கு இருந்திருக்கும் நான் தவழ்ந்த போது எழுந்து நடந்தபோது ஓடும்பொழுது எத்தனை ஆர்பரித்து கைதட்டி கொண்டாடினார்கள் எதற்கு இத்தனை சந்தோசத்தை கொடுத்து நான் வளர வளர என்னை மட்டுமே சந்தோசப்படுத்தி அவர்களை துன்பப்படுத்திக்கொண்டு எத்தனை அன்பை கொடுக்கிறார்கள் இப்படி சென்ற வாழ்க்கையை மரணம் என்ற போர்வையில் அவர்களை  கவர்ந்து செல்வது நியாயமா இத்தனை நாள் ஒட்டி உறவாடிய அந்த கைகள் என் கண்களில் நீர் வரும் முன்னரே அவர்கள் கண்களில் கண்ணீர் துளிகள் துடித்து கொண்டு வரும், என் முகம் சோர்வடைந்தால் அவர்கள் மனது துடியாய் துடிக்கும் அந்த  பொன்னான இதயம் எங்கே ?                                                                                                              உங்களை மண்ணில் புதைத்துவிடுவேன் என்று அப்போதே தெரிந்திருந்தால் அப்பொழுதே நாம் எல்லோரும் புதைந்திருக்கலாமோ இப்படி என்னை விட்டுவிட்டு நீங்கள் மட்டும் புதைந்து போனிர்களே நான் யாரை போய் கூப்பிடுவேன் அப்பா என்று என் உடலின் ஒவ்வொரு செல்லிலும் உங்கள் உதிரம் அல்லவா ஓடுகிறது என் செல்கள் ஒவ்வொன்றும் துடிக்குதப்பா உங்கள் திருமுகத்தை காண நான் எங்கே சென்று தேடுவது "வாழ்க்கை என்றால் ஆயிரமிருக்கும் வாசல் தோறும் வேதனை இருக்கும்" ஆனால் எனக்கு அந்த ஆயிரமும் நீங்கள் தான் ஆனால் எனக்கு வேதனை என்றாலே தெரியாமல் வளர்த்துவிட்டு மொத்தமாக கொடுத்துவிட்டிர்களே என் வாழ்க்கை விளக்கை சுடரை ஏற்றிவிட்டு நீங்கள் இருட்டிற்குள் சென்றுவிட்டிர்களே "பிறப்பு எப்படி என்று என் பிறப்பில் நான் தெரிந்து கொண்டேன் ஆனால் இறப்பு எப்படி என்று உணர்த்தவா நீங்கள் சென்றீர்கள் " உங்கள் புன்னகை பூத்த முகத்துடன் நீங்கள் சென்றுவிட்டீர்கள் என் புன்னகை அல்லவா தொலைந்து போனது வானில் தோன்றும் கருமேகமா நீங்கள் திடீரென்று களைந்து செல்வதற்கு ,நீங்கள் சூரியன் என்றல்லவா இதுவரை நான் நினைத்திருந்தேன் ஆனால் சந்திரனை போல் மறைந்துவிட்டீர்களே                                                                   

3 கருத்துகள்:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...