செவ்வாய், 12 அக்டோபர், 2010

என்ன இல்லை இந்த திருநாட்டில் ?

அன்பு தமிழ் நெஞ்சங்களுக்கு என் அன்பார்ந்த வணக்கங்கள் ,
உண்மையிலேயே என்ன இல்லை இந்த திருநாட்டில் ஏன் அனைவரும் வெளிநாட்டிற்கு சென்று திரும்ப மறுக்கிறார்கள் என்று ஒரு நிமிடம் யோசித்து பார்த்தால் இவ்வளவு வளங்களா  நம்நாட்டில் நம் நாட்டில்
  கோவில்கள் தோறும் பிச்சை காரர்கள்இல்லையா? சாமி என்ற பெயரில் கொள்ளை அடிக்கும் புண்ணிய ஆத்மாக்கள் இல்லையா ?கோவில்   கருவறையில் சல்லாபிக்கும் பூசாரிகள் இல்லையா? அதையே வீடியோவாக எடுத்து வெளியிட்டு சம்பாதிக்கும் கயவர்கள் இல்லையா?நாம் குடிக்கும் ஆற்று நீரிலேயே நம் கழிவு கலந்த சாக்கடை நீரை அதிலேயே கலக்கவிட்டு அதையே சுத்தம் என்ற பெயரில் ஏதோ செய்து திரும்ப நாமே குடிக்கின்றோமே அது எவ்வளவு பெரிய விஷயம் நம் நாட்டு குடி நீரை வெளி நாட்டு குளிர் பானக் கம்பனிகளுக்கு தாரை வார்த்து கொடுத்துவிட்டு நாமே பாட்டில் பதினைந்து ரூபாய் கொடுத்து வாங்கி குடிப்பதில்லையா ?
வீதிகள் தோறும் சுத்தம் செய்வதாக சொல்லி ஊரெல்லாம் குப்பையை இறைத்துக்கொண்டு செல்லும் லாரிகள் இல்லையா? அசுத்தம் செய்யாதே என்று எழுதியிருந்தால் அதையே  தேடிச் சென்று அசுத்தம் சேயும் செயல் வீரர்கள் இல்லையா? ஐம்பது ருபாய் மதுவுக்காக கொலை செய்பவர்களும் சொத்துக்காக தன் குடும்பத்தையே வெட்டுபவர்களும் தன்வீட்டிலே திருடி வாழ்பவர்களும் இங்கு இல்லையா ? 
அரசியல் வாதிகளுக்காக வெட்டிக் கொல்வதும் மக்களைத் துன்புறுத்தவும் மாற்றான் இடத்தை அபகரிப்பதும்,மாற்றான் மனைவியை கவர்ந்து செல்வதும் அதற்காக கொலை செய்வதும் அரசியலுக்காக பேருந்துகளை தீயிட்டு எரிப்பதும் கல்லூரி மாணவிகளை தீயிட்டு கொளுத்திவிட்டு தூக்குக்காக காத்திருப்பதும் எவ்வளவு நல்ல மனிதர்கள் மனிதநேயமிக்க மகான்கள் வாழும் புண்ணிய பூமியல்லவா இது ?
   எதிலெல்லாம் லஞ்சம் வாங்க முடிமோ அத்தனையிலும் லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் முதல் அங்கிருக்கும் மெய்க்காப்பாளன் வரை அனைவரும் லஞ்சப்பணத்தில் ஊறி திளைக்கும் எஜமானர்கள் வாழும் பூமி இல்லையா ?அரசு அதிகாரிகள் என்றாலே மக்களிடம் காட்டும் அன்பு தான் என்ன எவ்வளவு கேவலமாக நடத்தமுடியுமோ அவ்வளவு அழகாக கேவலப்படுத்தும் புனிதர்கள் வாழும் இடமப்பா இது 
 நல்லாசிரியர் விருது கொடுத்தால் அவர் உடனேயே இலஞ்சம் பெற்று நல்லாசிரியராக தன்னை நிரூபித்துக்கொள்ளும் பக்குவம் காவல் துறை உங்கள் நண்பன் என்று மார்தட்டிக் கொள்ளும் காவல் துறை நண்பர்கள் இருக்கிறார்களே அவர்களை பற்றி தெரிய வேண்டுமென்றால் ஒரு முறை லாரியில் பயணம் செய்து பார்த்தால் தெரியும் அவ்வளவு நன் மக்களை காவலர்களாகப் பெற்ற நாடு விருது வாங்கிய லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரியே இலஞ்சம் வாங்கி மாட்டும் புனித செயல் இங்கல்லவா நடக்கிறது இயற்க்கை கொடுத்த கனிம வளங்களை கொள்ளை இங்கு வெகு விமர்சியாக நடக்கிறது 
 கல்வி என்ற பெயரில் கொள்ளையடிக்கும் கயவர்களைக் கொண்ட ஆத்மார்த்தமான நாடு இது 
பத்து படங்கள் நடித்து முடித்தாலே நாட்டிற்கே முதல்வராக ஆகிவிடவேண்டும் என்ற எண்ண்த்தை தோற்றுவிக்கும் மக்களை பெற்ற நாடு ,தன் தாய்க்கு கோவில் கட்டுகிறானோ இல்லையோ ஒரு நடிகைக்காக கோவில் கட்டும் இளைய சமுதாயத்தை  பெற்ற நாடு 
மதுபானத்திற்கு தனியார் கடைகளை தேட வேண்டாம் ,நாங்களே உங்களை கொல்ல தயாராக இருக்கிறோம் இதோ வாங்கிக் கொள்ளுங்கள் என்று அரசே ஏற்ற்று நடத்தும் மதுபானக் கடைகள் நிறைந்த நாடு தன்னிடத்தில் மின்சார உற்பத்தி செய்து மற்றவர்களுக்கு தாரை வார்த்துவிட்டு நமக்கு மின்சார பற்றாக்குறை என்று அறிவிக்கும் போது நலம் கொண்ட நாடு அரசு அலுவலர் ஒருவர் தவறு செய்து அதை தட்டிக் கேட்டால்   அந்த நிர்வாகத்தையே முடக்கும் அளவுக்கு வேலை நிறுத்தம் என்ற பெயரில் மிரட்டும் அரசு அலுவலர்களைக் கொண்ட நாடு 
 ஜாதி மதம் என்ற பெயரில் அரசியல் இலாபத்துக்காக கட்சி தொடக்கி நாட்டிலேயே வன்முறைகளைத் தூண்டும் மக்களாட்சி பெற்ற நாடு ,
 அந்த ஆட்சியையே தேர்ந்தெடுக்கும் மக்கள் தன் ஓட்டுக்காக பணம் வாங்கிக்கொண்டு தன் ஓட்டை  விற்கும் மக்களை பெற்ற நாடு தன் ஆட்சியை நிலை நிறுத்த தாங்களே ரவுடிகளை வளர்த்து பணமும் கொடுத்து வெட்டி கொலை செய்யும் அளவுக்கு வளர்த்துள்ள நாடு 
இன்னும் என்ன வேண்டும் இந்த திருநாட்டில் ஏன் செல்கிறீர்கள் வெளிநாட்டிற்கு ?

1 கருத்து:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...