வெள்ளி, 22 அக்டோபர், 2010

உனக்கா இந்த நிலை

என் அன்பு வாசக நெஞ்சங்களுக்கு என் அன்பு வணக்கங்கள் 
  ஒரு கொடிய விசமுள்ள மரத்தை நாமே வளர்த்துக் கொண்டிருக்கிறோம் அது நம் சமூகத்தில் வேரூன்றி மிக வேகமாக வளர்ந்து இன்று பல குடும்பங்களை விழுங்கிக் கொண்டிருக்கிறது இது தன்னை கொன்றுவிடும் என்று தெரிந்தும் எல்லோரும் இதை வெறுத்தாலும் இதை  விட முடியவில்லை,இதனால் பல உயிர்கள் சித்திரவதைப்பட்டு வெளியில் சொல்ல இயலாமல் துடி துடித்து கொண்டிருக்கிறார்கள்
   அதை என்ன என்று சொல்ல கூட மனது வேதனையாய் இருக்கிறது அது சிலரின் கவுரவத்தின்  வெளிப்பாடாக நினைக்கின்றனர் சிலர் தன் நிலையை நினைக்காமல் சமுதாயத்தில் மதிக்கப்பட வேண்டும் என்ற நிலையை மட்டுமே மனதில் உறுதியாய் கடைப்பிடித்து பின்னர் அந்த சமுதாயத்தாலேயே அழிந்துவிடுகின்றனர் பல பெற்றோர்களின் உயிரை அட்டையை உறிஞ்சும் அந்த மரம் வரதட்சனை 
என்ற கொடிய விசமே 
  வரதட்சணை யார் வர தட்சணை தர வேண்டும்இந்த கொடிய விசத்தை கண்டு புடித்த  அந்த புனித ஆத்மா யாராக இருக்கும் எதற்கு இந்த பெண்ணினத்திற்கு இத்தனை சாபம் அவர்களுக்கு மட்டும் ஏன் இத்தனை கட்டுப் பாடுகள் அவர்களின் வாழ்க்கைக்கு மட்டும் ஏன் விலை நிர்ணயிக்கின்றன எதற்கு  இந்தகொடுமை 
  ஒரு உதாரணம்  
         நேற்று வெளி வந்த  ஒரு உண்மை சம்பவம் சேலம் அருகே புதுப் பெண்ணை தனியறையில் பூட்டி வைத்து ஒரு மாதத்திற்கு மேலாக வரதட்சனை கேட்டு கொடுமை படுத்தயுள்ளனர் கொடுமை செய்த மாமனார் மாமியார் கணவர் அனைவரையும் கைது செய்து  சிறையில் அடைத்தனர் 
     சங்கீதாவின் பெற்றோர், பாலசுப்ரமணியத்துக்கு 50 சவரன் நகை, நான்கு லட்சம் ரூபாய் ரொக்கப்பணம் மற்றும் பொருட்கள் கொடுத்தனர். கார் வாங்க பணம், நகை கேட்டு, பாலசுப்ரமணியன் மற்றும் அவரது குடும்பத்தினர் தொந்தரவு செய்ததோடு, முதலிரவுக்கும் அனுமதிக்கவில்லை.

பணம், நகை வாங்கி வராததால், இளம்பெண் சங்கீதாவை வீட்டினுள் தனி அறையில் பூட்டி, கழிவறை தண்ணீரை கொடுத்து சித்ரவதை செய்தனர். தகவலறிந்த சங்கீதாவின் பெற்றோர், மகளை உறவினர்களுடன் சென்று மீட்டனர். "திருமணமாகி வீட்டிற்கு வந்ததும் என் தாத்தா இறந்து விட்டார். திருமண நாள், தாத்தா இறந்த நாள் ஒன்றாக நடத்த வேண்டியுள்ளது. அதனால் அப்பெண்ணுடன் வாழமுடியாது' என, பாலசுப்ரமணியன் தெரிவித்தார். ஆத்தூர் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் சங்கீதா, புகார் செய்தார்.


இதையடுத்து பாலசுப்ரமணியன் (27), மாமனார் யூனியன் இன்ஜினியர் மகாலிங்கம் (57), மாமியார் கலாவதி (43) ஆகிய மூவர் மீது, பெண்ணை கொடுமை செய்தல், அடைத்து வைத்து சித்ரவதை செய்தல், நம்பிக்கை மோசடி செய்தல், வரதட்சணை கேட்டு கொடுமை செய்தல் ஆகிய நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து, கைது செய்யப்பட்டனர். சங்கீதாவின் தந்தை மகாலிங்கம் கூறியதாவது: என் மகள் சங்கீதா, சென்னையிலுள்ள தனியார் கம்ப்யூட்டர் நிறுவனத்தில், சாப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரிந்தார். திருமண ஏற்பாட்டின்போது, மகளின் வேலையை விட்டு வரும்படி தெரிவித்தார். அதன்பின், ஒரு மாதத்திற்கு முன் திருமணம் நடந்தது.


திருமணத்தின்போது 50 சவரன் நகையும், "பொலீரோ' கார் வாங்க நான்கு லட்சம் ரூபாய் கொடுத்தோம். தற்போது, 9 லட்சம் ரூபாய்க்கு கார் வாங்கியதால், மீதமுள்ள 5 லட்சம் ரூபாயும், 25 சவரன் நகை கொடுத்தால் மட்டுமே மகளுடன் வாழமுடியும் என, பாலசுப்ரமணியன் தெரிவித்தார். அதன் பிறகு, மகளை தனி அறையில் பூட்டி வைத்து நாள்தோறும் ஒருவேளை சாப்பாடு மட்டுமே கொடுத்து, கழிவறை தண்ணீரை குடிக்கும்படி வற்புறுத்தியுள்ளனர்.


திருமணமாகி 40 நாளில் பல கொடுமைகளுக்கு மகள் ஆளாகியுள்ளார். இதற்கு காரணமான அவரது பெற்றோர் உள்ளிட்ட நபர் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மகாலிங்கம் கூறினார். வழக்கிலிருந்து விடுவிக்க முயற்சி: மகுடஞ்சாவடி யூனியன் இன்ஜினியராக, மகாலிங்கம் பணிபுரிகிறார். விசாரணைக்காக போலீசார், அவரை அழைத்து வந்ததை அறிந்த ஆத்தூர் யூனியன் பி.டி.ஓ., - ஏ.பி.டி.ஓ., மற்றும் அலுவலர்கள், நான்கு மாதத்தில் ஓய்வு பெறும் பொறியாளர் மகாலிங்கத்தை வழக்கிலிருந்து விடுவிக்கும்படி, ஒரு மணி நேரத்திற்கு மேலாக மகளிர் போலீசாரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

வழக்கு பதிவு செய்யப்பட்ட ஆவணங்களில் கையெழுத்து போட போலீசார் அழைத்தபோதும் பொறியாளர் மகாலிங்கம், மாவட்ட கலெக்டரிடம் தெரிவித்துள்ளதாக கூறி, கையெழுத்து போட மறுத்தார். ஆனால், மகளிர் போலீசார் மகாலிங்கம் உள்பட மூவரையும் கைது செய்து, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்     
 இதில் யாரை குறை சொல்வது பெண்ணை  பெற்ற பெற்றோர்களையா அந்த பெண்ணை திருமணம் செய்து வந்து கொடுமை செய்த அந்த பண வெறி புடித்த மிருகங்களையா ? இதில் தவறு செய்தவர்கள் என்னை பொறுத்த வரையில் அந்த பெண்ணின் பெற்றோர்களே, ஒரு சாப்ட்வேர் கம்பனியில் வேலை செய்கின்ற ஒரு பெண்ணுக்கு இந்த நிலை என்றால் படிக்காத பாமர பெண்களின் நிலை என்ன?


தயவு செய்து படித்து உங்கள் கருத்துக்களையும் ஓட்டுகளையும்  தவறாமல் எழுதுங்கள் 

3 கருத்துகள்:

  1. வரதட்சணை என்று ஒழிக்கப்படுமோ அன்று பெண்களைப் பெற்ற பெற்றோர்கலுக்கு விடுதலை

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...