செவ்வாய், 23 நவம்பர், 2010

என்னை அழிக்க முடியுமா?

 நான் அழிந்து கொண்டிருக்கிறேனா ?

           எனக்கு அழிவு என்பது எப்பொழுதும் கிடையாது அப்படி ஒரு நிலை இந்த உலகுக்கு வேண்டுமானாலும் நிகழலாம் எனக்கு நிகழாது ,
என் புகழை மற்றவர்களுக்கு சொல்லித் தெரிய வேண்டிய அவசியமில்லை, நான் உலகுக்கே முன்னோடி எனக்கு அழிவா?
என் மக்கள் உலகின் ஒவ்வொரு மூலையிலும் குடிகொண்டுள்ளார்கள் நான் உலகம் முழுவது பரவியவன் எனக்கேது அழிவு ?
 ஆயிரம் புதியவர்கள் உள்ளே வந்தாலும் எனக்கு எப்பொழுதும் தனி இடமுண்டு நான் அறிவின் சிம்மாசனம் 
என் பேரை சொல்லும் போதே ஆழ் மனதில் அலைகடலென சந்தோசம் துள்ளி விளையாடும் இது என் மக்களுக்கு புரியும் 
உலகில் என்னை புகழ்ந்தவர்களை  விட மற்ற எவருக்கும் இந்த வாய்ப்பு கிடைத்ததுமில்லை இனி எவருக்கும் கிடைக்கப் போவதுமில்லை 
என்னை ஒரு முறை விரும்பிவிட்டால் மற்றவர்கள் உன் கண்களுக்கு தெரியாமல் காணாமல் போய்விடுவார்கள் 
எனக்கு அழிவாம் இவர்கள் காப்பாற்றினால் தான் என்னை காப்பாற்ற முடியும் என்ற மாயையை மக்கள் மனதில் விதைத்து குளிர் காயும் அன்பர்களே ஒரு முறை என் மக்களை முழுமையாக கேட்டுப் பாருங்கள் என்னை அழிக்க எவரேனும் உண்டா என்றால் உண்டு 
என்னைவைத்து தன் சுய நலத்திற்க்காக பயன்படுத்தும்  கேவலமானவர்கள் இங்கு நிறைய உண்டு அவர்கள் தினமும் அவர்கள் என் பெயரை சொல்லி சொற்பொழிவு ஆற்றும்போது நானே கூனி குறுகி போகிறேன் 
என் புகழை பெருமையை பாடிய முத்தமிழ் புலவர்கள் தன் பொன்மொழிகளால் புகழப்பெற்ற நான் இன்று நினைத்து நினைத்து வேதனையால் துன்பப்படுகிறேன் 
 நான் யார் ?
  
                      உங்கள் தமிழ் என்னையும் அழிக்க எவரேனும் உண்டோ?
   எனக்கென்று ஒரு மரியாதை எனக்கென்று ஒரு பாரம்பரியம் உண்டு அதை அழிப்பதின் முன்னோடிகள் இன்று உருவாகியிருக்கும் ஆடம்பர விரும்பிகள் 

என் பாரதியின் வரிகள் :
      வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ் மொழி 
     வாழிய வாழிய வே ,
     வான மளந்த தனைத்தும் அளந்திடும் 
     வண் மொழி வாழிய வே 
     ஏழ்கடல் வைப்பினுந்  தன்மணம் வீசி 
     இசை கொண்டு வாழிய வே 
     எங்கள் தமிழ் மொழி எங்கள் தமிழ் மொழி 
     என்றென்றும்  வாழிய வே  

இன்னும் தமிழுடன் உங்களோடு பயணிப்பேன் ................

இதை படித்துவிட்டு தவறாமல் உங்கள் கருத்துகளையும் ஓட்டுகளையும் அளியுங்கள் இது நீங்கள் கொடுக்கும் தமிழின் பெருமை........

வியாழன், 18 நவம்பர், 2010

ஐயோ இது உண்மையா .3

ஐயோ இது உண்மையா .3
                  
             ஏதோ ஒரு பெரிய சத்தம் ஏதோ அவர்களை நோக்கி வரும் சத்தம் கேட்டவுடன் மூவருக்கும் ஒரு கணம் என்ன செய்வதென்று புரியவில்லை சட்டென்று முருகன் இருவரையும் அழைத்துக்கொண்டு அருகில் இருந்த செடிகொடி அடங்கிய புதருக்குள் சென்று மறைந்து கொண்டனர் 
   சத்தம் மிக அருகாமையில் கேட்டது இப்பொழுது நிறைய சத்தங்கள் கேட்டது  புதரின் அருகில் வரும்போது தான் தெரிந்தது அவை கரடிகள் என்று அவைகள் அனைத்தும் அந்த பெரிய மரத்தின் கீழே நின்று விளையாட ஆரம்பித்தன இவர்களுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை அவர்களுக்கு தண்ணீர் தாகம் அதிகமானது ஆனால் வெளியே சென்றால் உயிரே போய்விடும் என்ன செய்வது அப்பொழுது 
  
  திடீரென்று ஒரு கரடி அந்த புதரையே உற்று நோக்கியது,பின்னர் மெதுவாக அந்த புதரை நோக்கி வர ஆரம்பித்தது இவர்கள் நிலை மிகவும் கவலைக்கிடமானது  என்னசெய்வதென்றே தெரியவில்லை சட்டென்று முருகன் தன்னருகே காய்ந்த மர கட்டை ஒன்று  கிடந்தது அதை கையில் எடுத்துக் கொண்டான் எது நடந்தாலும் தயாராக இருங்கள் என்று சொல்லிவிட்டு அதை தாக்க தயாரானான் அவர்கள் எங்களால் அதிக தூரம் ஓடக்கூட முடியாது பொறுமையாய் இரு என்று சமாதானம் செய்தார்கள்
  
   புதருக்கு அருகில் வந்து விட்டது நுகர்ந்து பார்க்கிறது தன் முகத்தை புதரில் நுழைக்க முற்படும் போது அதற்க்கு பின்னால் இன்னொரு சிறிய கரடி அதன் மீது வந்து வேகமாக மோதி விளையாடியது சட்டென்று திரும்பி அதனுடன் விளையாட ஆரம்பித்து விட்டது 
  சிறிது நேரத்தில் அங்கிருந்து அனைத்தும் வேறொரு திசையை நோக்கி செல்ல ஆரம்பித்து விட்டன அப்பொழுது தான் தன் சுயநிலைக்கு  திரும்ப ஆரம்பித்தனர்,அங்கிருந்து வெளியே வந்தனர் 
  முதலில் தண்ணீர் குடிக்க வேண்டும் பின்னர் எது நடந்தாலும் சரி என்று தண்ணீர் இருக்கிமிடம் தேட ஆரம்பித்தனர் அதற்க்கு அவர்களுக்கு அதிக நேரம் தேட அவசியமில்லாமல் சிறிது தூரத்திலேயே தண்ணீர் ஓடும் சல சல சத்தம் கேட்டது அந்த திசையை நோக்கி வேகமாக நடந்து சென்று பார்த்தால் அங்கு மிகப் பெரிய ஆறு ஓடிக் கொண்டிருக்கிறது அதில் ஓடும் தண்ணீர் எந்த வித அசுத்தமும் இல்லாமல் அவ்வளவு சுத்தமாக இருந்தது மூவரும் வேகமாக  சென்று தண்ணீரை தொட்டவுடன் வேகமாக கையை பின்னோக்கி இழுத்தனர் அவ்வளவு குளிர் மையாக இருந்தது ஆசுவாசப் படுத்திக் கொண்டு மெதுவாக அருந்த ஆரம்பித்தனர் ,தண்ணீர் உள்ளே செல்ல செல்ல அவர்களுக்கு ஒரு இனம் புரியாத் சக்தி ஒன்று தன்னுள் நுழைவதாக உணர்ந்தனர் 
   
   அதனருகே சிறிது தூரத்தில் ஏதோ பழங்களின் தோட்டங்கள் இருப்பதைக் கண்டனர் அங்கே சென்று பார்த்தால் பல வகை பழங்கள் காய்த்து தொங்கின பறித்து சாப்பிட்டு பசியாரினர் அங்கேயே ஒரு மரத்தின் அடியில் படுத்தனர் படுத்தவுடன் சோர்வினால் உறங்கிவிட்டனர் கண்விழித்து பார்த்த போது மாலை நேரமாகி சூரியன் மறையத் தொடங்கிவிட்டது ,அப்பொழுது தன் சுய ஞாபகங்கள் மீண்டும் தோன்ற ஆரம்பித்தன ,இப்பொழுது நாம் எங்கிருக்கிறோம் ,எப்படி நம் ஊருக்கு செல்வது நாம் உயிரோடு திரும்பி செல்வோமா என்று பயம் உருவாகியது இன்றும் இந்த காட்டில் தான் இருக்க வேண்டுமா ? என்று மூவரும் பேசிக் கொண்டே அங்கிருந்து நடக்க ஆரம்பித்தனர் எங்கே செல்கிறோம் என்று தெரியாமலே அப்பொழுது 
  
  ஒரு ஒற்றையடிப் பாதை தெரிந்தது அதை பார்த்தவுடன் ஒரு மகிழ்ச்சி எல்லோரின் மனதிலும் ,இங்கு யாரோ இருக்கிறார்கள் அவர்களிடம் சென்றால் கட்டாயம் வழிகிடைக்கும் என்று அந்த பாதை  வழியாக நடக்க ஆரம்பித்தனர் இருட்ட ஆரம்பித்தது ஏற்க்கனவே மரங்கள் அடர்ந்து இருந்ததால் வெளிச்சம் குறைவாக தான் இருந்தது ,இருட்டு அதிகமானதால் பாதையை  தவிர ஒன்றுமே கண்களுக்கு தெரியவில்லை வேகமாக நடந்தனர் நடக்க நடக்க பாதை நீண்டு கொண்டே சென்றது .
  
அப்பொழுது அந்த வழியில் இவர்களை பார்த்துக் கொண்டு ......................?
      
 இன்னும் திகில் தொடரும் ..............என்ன படித்துவிட்டீர்களா ? தயவு செய்து உங்கள் கருத்துக் களையும் ஓட்டுகளையும் மறவாமல் அளித்து செல்லுங்கள் 
 
    

      

திங்கள், 15 நவம்பர், 2010

யார் ஊழல் செய்தது ?

   ஒரு வலைத்தளம் என்பது பலவிதமான எண்ணங்களையும் செயல்களையும் உலகம் முழுவதும் பரவிக்கிடக்கும் நம் தமிழ் உறவுகளை தமிழ் இரத்தங்களை ஒன்றிணைந்து அறிந்து கொள்வதற்காகவே பயன்படுகிறது
  மற்றவர்களை குறை சொல்லுவதை விட்டுவிட்டு தன்னை திருத்திக் கொள்பவனே புத்திசாலி 

    சரி இன்றைய முதன்மை செய்தி ராசா பதவி விலகல்
   
ஊழல் கதையை  விடுங்க ......
   இவர் யாருங்க இவர் மட்டும என்னமோ பெரிய தவறா செய்த மாதிரி இவரையே
   குற்றம் சொன்னா எப்படி?
  அப்பா மற்றவங்களெல்லாம் தப்பே பண்ணாதவங்களா ?
  இப்ப எல்லோருக்குமே என்ன வயிதெரிச்சல் நம்மை விட ஊழலில் முதலிடம் பிடித்துவிட்டாரே என்ற கவலைல தான் இத்தனை  ஆர்ப்பாட்டம்
இவர் நம் தமிழகத்தில் இருந்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு தன் கட்சின் தலைவர் இங்கிருந்து டெல்லி சென்று இந்த இலாக்காக்கள் தான் வேண்டுமென்று பிடிவாதமாக நின்று அது கிடைக்கவில்லை என்று உடனே தமிழகத்திற்கு வந்து செயற்குழுவைக்  கூட்டி விவாதம் செய்து எவ்வளவு கஷ்டப்பட்டு  வாங்கினார் என்று பதவி வாங்கியவர்களுக்கு தான் தெர்யும் அதன் அருமை பெருமை எல்லாம் 
கஷ்ட்ட பட்டவங்களுக்கு  தான் தெரியும் ,இவ்வளவு கஷ்டப்பட்டு வாங்கினது விளையாடுவதற்கா ?
 நாட்டுக்கு நல்லது செய்யணும்னு முடிவெடுத்து மக்கள் கிட்ட நல்ல பெயர் வாங்கி மக்களிடம் ஓட்டுக்கு லஞ்சம் கொடுக்காமல் ஜெயித்து போனவங்கலாயிருந்தால் எந்த துறையை கொடுத்தாலும் அதை ஏற்று நல்ல படியா முன்னேற்றம் செய்வாங்க 


இதை போய் தவறாக சொல்வது நம்முடைய குற்றம் ஓட்டுக்காக எப்பொழுது பணம் வாங்க மக்கள் ஆரம்பித்தார்களோ அப்பொழுதே கேள்வி கேட்க்கும் சக்தியை இழந்துவிட்டார்கள் 
இன்னும் வரும் காலத்தில் இவர்களின் சண்டையை நாம் பெரிது படுத்தக் கூடாது எது நடந்தாலும் நாம் வேடிக்கை பார்ப்பது மட்டுமே நம் வேலை அடுத்த தேர்தலில் எவ்வளவு தேறும் என்று கணக்கு போடுங்கள் மக்களே ........................... 

இதை நான் பதிவு செய்யும்  போது இன்னொரு தகவல் ஸ்பையிஸ்  ஜெட் இன் தலைவரானார் கலாநிதிமாறன் 

திங்கள், 8 நவம்பர், 2010

ஒரு தோலுரிந்த உண்மை

ஒரு தோலுரிந்த உண்மை ,
  நம் படைப்பில் இரு நிலையை கொடுத்த இறைவன் இப்படி ஒரு அவல நிலையை கொடுத்திருக்க கூடாது ஆயிரம் துன்பங்கள் வந்தாலும் தாங்கிக்கொள்ளலாம் ஆனால் இந்த கொடுமையை எவராலும் தாங்க முடியாது நாம் பேசுவதற்கு மிக சுலபமாக இருக்கும் அதை அனுபவித்து பார்ப்பவர்களுக்கு தான் அதன் வேதனை தெரியும்
  பசி இந்த கொடுமையை யாராலும் தாங்க இயலாது மனிதனாய் பிறந்து பட்டினியால் சாவதென்பது இருக்கும் தண்டனைகளிலே மிகவும் கொடுமையான தண்டனை,இந்த நிலைக்கு ஆளாக வேண்டிய காரணம் என்ன 
 இதை ஒரு நிமிடம் சிந்தித்துப் பாருங்கள் ,சிலருக்கு வருத்தமாகக் கூட இருக்கலாம் ,பலருக்கு தனக்கு தேவையை மீறிய பல வசதி வாய்ப்புகள் இருக்கிறது ஆனால் ஒருவேளை சாப்பாட்டிற்கு யாராவது வந்து கேட்டால் விரட்டிவிடுகிறார்கள் அந்த வீட்டில் வளரும் நாய்கள் கூட உயர்ந்த வகை உணவுகளையே  உட்கொள்ளும் 
   ஆனால் அன்பு பாசம் மிகுந்த பல கிராமங்கள் மிக அடர்ந்த காடுகளிலும் மற்ற பல இடங்களிலும் நம் நாட்டில் உண்டு ,அவர்கள் என்ன சாப்பிடுகிறார்கள் என்று கேட்டால் உடனே அவர்கள் காட்டில் ஏதாவது மிருகங்களை வேட்டையாடி சாப்பிடுவார்கள் என்று நாம் இங்கிருந்து கொண்டு அழகாக சொல்லி விடுவோம்
   ஆனால் அவர்கள் சாப்பிடுவதை விட ஆடம்பர வாழ்க்கை வாழும் கலாசார முன்னேற்றமுடைய மக்களே அதிகம் உண்கின்றனர் மாமிசங்களை ,தனக்கு உண்பதற்காகவே கம்பனிகள் வைத்து உற்பத்தி செய்து மாமிசம் உண்பவர்கள் அல்ல காட்டில் வாழ்பவர்கள் தன் தேவைக்காக மற்றவர்களை வெட்டிக் கொல்பர்கள் அல்ல,தனக்கு கிடைத்ததை மற்றவர்களுடன் பகிர்ந்துண்பதே அவர்களின் பண்பாடு 
  ஆனால் பசியாலும் பட்டினியாலும் வாடி உயிரைவிடுவது இவர்களே அதிகம் இவர்களைக் காப்பாற்ற உண்ண உணவு கொடுக்க யாருமே முன் வருவதில்லை 
  தான் நினைக்கும் செயல்கள் நிறைவேறவேண்டும் என்று கோவில் கோவிலாக செலவு செய்து கொண்டு செல்கிறார்கள் அது நிறைவேறினால் சாமி தான் நிறைவேற்றினார் என்று கோடி கோடி யாய் உண்டியலில் போட தயாராய் இருக்கின்றனர் ஆனால் ஒரு வேலை உணவு கொடுக்க தயாராக இல்லை அந்த கடவுள் கேட்டாரா எனக்கு கோடி கோடி யாய் கொட்டுங்கள் என்று அப்படி அவன் கேட்பவனாக இருந்திருந்தால் இவர்களுக்கு உணவில்லை என்று அவனுக்கு தெரிந்திருக்குமே அவர்களுக்கு கொடு என்று சொல்லியிருப்பானே ஆனால் அப்படி சொல்ல அவன் வரமாட்டான் தனக்கு லஞ்சம் கொடுப்பவர்களுக்கு மட்டும் செய்து கொடுக்க அவன் கடவுளா அல்லது மானிட ஜென்மமா ?
  மழை வருகிறது தொடர்ந்து நான்கு நாட்கள் மழை நீடிக்கும் என்று அறவிப்பு வந்த உடனே பலர் கவலைப்படுவது தன் வியாபாரம் நின்று  போய்விடுமே வருமானம் குறைந்து போகுமே என்றும் பலருக்கு விடுமுறை கிடைத்துவிட்டதே என்ற மகிழ்ச்சியும் வரும் 
  ஆனால் தினமும் கூலி வேலை செய்து அந்த பணத்தில் உணவருந்தும் பல குடும்பங்கள் அந்த மழை காலங்களில் என்ன செய்யமுடியும் ,பலரின் வசிப்பிடங்களாக பாதையின் ஓரங்களிலும் மேம்பாலங்களின் அடியிலும் லட்சக்கணக்கானோர் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் அவர்களின் நிலையை கொஞ்சம் நினைத்துப் பாருங்கள் 
 சரி இதற்க்கெல்லாம் நாங்கள் என்ன செய்வது என்று தானே மேல் தட்டு மக்களின் கேள்வி உண்மையான கேள்வி ,அதற்க்கு தான் அரசாங்கம் இருக்கிறதே என்று பதிலும் உடனே வரும் அவர்களிடம் 
 தயவு செய்து உங்களிடம் ஒன்று கேட்டுக்கொள்கிறேன் அள்ளி கொடுக்கவேண்டாம் ,உங்கள் அருகாமையில் எத்தனையோ குடும்பங்கள் வறுமையில் வாடிக்கொண்டிருக்கும் உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள் அதுவே நீங்கள் விரும்பும் கடவுளும் விரும்புவார் எந்த கடவுளும் உதவி  செய்யாதே என்னிடத்திலே கொண்டுவந்து கொடு என்று சொன்னதில்லை அப்படி சொன்னால் அவர் கடவுளே இல்லை இல்லை இல்லை.
   இதற்க்கெல்லாம் ஒரே காரணம் மனித நேயம் செத்துக் கொண்டிருக்கிறது என்று சொல்வதை விட செத்தே போய்விட்டது என்பதே உண்மை ,ஒரு காட்டில் மிருகங்களோடு வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்களிடத்தில் இருக்கும் மனத நேயத்தில் கால் பங்கு கூட நாட்டிற்குள் இல்லை 
 சாமிக்கு கொட்டிக் கொடுக்க தயாராக இருக்கிறான் ஆசாமிக்கு கொடுக்க தயாராக இல்லை பசித்தவனுக்கு உணவளித்தால் ஓராயிரம் முறை பிர்ரார்த்தனை செய்தததற்கு சமம்   

  உங்களின் மேலான கருத்துக்களை தைரியமாக வெளியிடுங்கள் ................

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...