செவ்வாய், 2 நவம்பர், 2010

இது பொய்யல்ல உண்மை

அன்பு தமிழ் நெஞ்சங்களுக்கு என் வணக்கங்கள்
 என் பதிவை தொடர்ந்து எழுத எவ்வளவோ  முயற்சி செய்கிறேன் ஆனால் ஏதோ ஒரு தடங்கல் என்னை தடுக்கிறது , ஏதோ ஒன்று எழுதினால் போதுமென்று நினைக்க என் மனது இடம் தரவில்லை எது  எழுதினாலும் ஏதாவது ஒரு விஷயம் ஒன்று இருக்க வேண்டும் அதுவும் பயனுள்ளதாக இருக்கவேண்டும் என்பதே என் நோக்கம் அதை கட்டாயம் நிறைவேற்ற முயற்சிசெய்வேன் என்று உறுதி மேற்கொண்டு இதோ என் படைப்பு...

     நாம் எவ்வளுவோ முயற்சி செய்தும் சில நிகழ்வுகள் நடக்காமலேயே போய்விடுகின்றன ,ஏன் என்று எவ்வளவோ முயற்சி செய்தும் நம்மால் கண்டுபிடிக்க முடியவில்லை என்று ஆதங்கப்பட்டதுண்டு .அது போல பல நிகழ்சிகள் என் வாழ்க்கையிலும் நடந்ததுண்டு ,ஆனால் அதற்க்கு ஏதோ ஒரு காரணமுண்டு என்று எப்பொழுதும் என் மனது நினைப்பதுண்டு இருந்தும் அதைப்பற்றி பல முறை மறந்துவிடுவதுண்டு
  ஆனால் இப்பொழுதெல்லாம் ஏதோ ஒன்று என் மனதில் இதை செய்வது யார் இதை எப்படி செய்தோம் நமக்கு இந்த ஆற்றலை அளித்தது யார் எங்கிருந்து வந்தோம் எங்கே செல்லப் போகிறோம் என்ன செய்வதற்கு பிறந்தோம் இதுவரை என்ன செய்தோம் இன்னும் என்ன செய்யவேண்டும் என்ற நினைவலைகள் என் மனதில் தோன்றி மறையும்
  இது உண்மையிலேயே ஒவ்வொரு மனித உயிருக்கும்  ஆல்  மனதில் கட்டாயம் இறக்கும் தருவாயிலாவது தோன்றும் என்று என்னால் உறுதியாக கூறமுடியும் ,பலரின் வாதம் நான் இயற்கையாகத் தோன்றினோம் என் அறிவை நான் பயன்படுத்தி நன்றாகப் படித்து நல்ல வேலைக்கு சென்று நன்றாக சம்பாதித்து நன்றாக வாழ்கிறேன் எல்லாமே இயற்கையாகவே தான் நடக்கிறது என்று சொல்கிறார்கள் பல கேள்விகள் பல இடங்களில் பலவாறு கேட்கிறார்கள் ஆனால் எல்லாவற்றிற்கும் என்னிடம் ஒரே பதில்
  
"அதைக் கேட்க வைப்பதும் உன்னை உலகுக்கு அறிமுகப்படுத்திய அந்த  அற்புதசக்தியே"

  அதை உடனே காட்டுங்கள் என்று வாதிடுவார்கள் உடனே ,
     நான் ஒன்று கேட்கிறேன் உங்கள் உடலில் வலிமை இருக்கிறது அதைக் காட்டுங்கள் உங்கள் உடலில் உயிர் இருக்கிறது அது எங்கே இருக்கிறது காட்டுங்கள் ,உங்கள் உடலில் காற்று சென்று வருகிறது அந்த காற்றைக் காட்டுங்கள் , இன்னும் பல கேள்விகள் நம்மாலும் கேட்க முடியும் அவர்களைப் போலவே ஆனால் அவர்களுக்குள்ளும் இந்த கேள்விகள் தோன்றும் சில விசையங்களை பேசுதற்கு  நன்றாக இருக்கும் அதை செய்து பார்க்கும்போது மிகவும் கடினமாக இருக்கும்
   சில அனுபவங்களை வார்த்தையால் விவரிக்க இயலாது உணர மட்டுமே முடியும் எல்லோருக்குமே தூங்கும் போது கனவுகள் வரும் அதில் ஒரு சில கனவுகள் மட்டுமே நினைவிருக்கும் அந்த கனவில் பார்த்த இடங்களை எப்போதாவது பார்க்க நேரும் சிலருக்கு அப்பொழுது ஒரு அளவிட முடியாத ஆச்சர்யம் தோன்றும்,இது ஒரு சிலருக்கு தோன்றும் கனவுகள் உண்மையிலேயே தொடர்ந்து நடக்கவும் செய்யும் ,இதுவும் ஒரு அற்புத சக்தியே அந்த உடலின் என்ன உணர்வுகளில் தோன்றவைத்து வெளிப்படுகிறது   
  இதில் ஒன்றை நம்புகிறீர்களோ இல்லையோ நமக்கு மீறிய சக்தி ஒன்று நம்மை ஆளுமை செய்து கொண்டிருக்கிறது என்பது நிதர்சனமான உண்மை உண்மை உண்மை 

7 கருத்துகள்:

 1. இது அனைவருக்கும் ஆல் மனதில் கட்டாயம் இருக்கும்

  பதிலளிநீக்கு
 2. நன்றாக எழுதி இருக்கீங்க. ஆனால் ஒன்று மட்டும் உறுதி செய்து கொள்ளுங்கள். நம்மை மீறிய சக்தி என்று உலகில் எதுவுமே இல்லை. நமக்கு உட்பட்ட சக்தி தான் உலகில் உண்டு. ஒரு உதாரணத்திற்கு கடவுள் கூட நம்முள் தான் இருக்கிறார் என சொல்வார்கள். ஆனானப்பட்ட கடவுளையே நமக்குள் அடக்கிவிட்ட பின்னர் நம்மை மீறிய சக்தி இருந்திட சாத்தியமோ?

  பதிலளிநீக்கு
 3. சக்தி நம்க்கு உட்பட்டது.. ஆனால் நம்மை சக்தி கட்டுப்படுத்தினால் ஆப்த்து மட்டுமே மிச்சும். ஆகவே, சக்தியை நாம் கட்டுப்படுத்த வேண்டும்... வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 4. கருத்துரைக்கு மிக்க நன்றி, நம்மை கட்டுப்படுத்துதல் என்பதே பலருக்கு தெரியாததாலேயே இத்தனை கேள்விகள்...........தோன்றுகிறது

  பதிலளிநீக்கு
 5. அதிசயங்களை ஒரு சிலரால் தான் நிகழ்த்த முடிகிறது
  மற்றவர்களால் யோசனை செய்தும் இயலாத காரியமாய் உள்ளது
  சிலரால் ஜோசனை செய்யவும் முடியாது

  பதிலளிநீக்கு
 6. அதிசயங்களை ஒரு சிலரால் தான் நிகழ்த்த முடிகிறது
  மற்றவர்களால் யோசனை செய்தும் இயலாத காரியமாய் உள்ளது
  சிலரால் ஜோசனை செய்யவும் முடியாது

  பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...