செவ்வாய், 23 நவம்பர், 2010

என்னை அழிக்க முடியுமா?

 நான் அழிந்து கொண்டிருக்கிறேனா ?

           எனக்கு அழிவு என்பது எப்பொழுதும் கிடையாது அப்படி ஒரு நிலை இந்த உலகுக்கு வேண்டுமானாலும் நிகழலாம் எனக்கு நிகழாது ,
என் புகழை மற்றவர்களுக்கு சொல்லித் தெரிய வேண்டிய அவசியமில்லை, நான் உலகுக்கே முன்னோடி எனக்கு அழிவா?
என் மக்கள் உலகின் ஒவ்வொரு மூலையிலும் குடிகொண்டுள்ளார்கள் நான் உலகம் முழுவது பரவியவன் எனக்கேது அழிவு ?
 ஆயிரம் புதியவர்கள் உள்ளே வந்தாலும் எனக்கு எப்பொழுதும் தனி இடமுண்டு நான் அறிவின் சிம்மாசனம் 
என் பேரை சொல்லும் போதே ஆழ் மனதில் அலைகடலென சந்தோசம் துள்ளி விளையாடும் இது என் மக்களுக்கு புரியும் 
உலகில் என்னை புகழ்ந்தவர்களை  விட மற்ற எவருக்கும் இந்த வாய்ப்பு கிடைத்ததுமில்லை இனி எவருக்கும் கிடைக்கப் போவதுமில்லை 
என்னை ஒரு முறை விரும்பிவிட்டால் மற்றவர்கள் உன் கண்களுக்கு தெரியாமல் காணாமல் போய்விடுவார்கள் 
எனக்கு அழிவாம் இவர்கள் காப்பாற்றினால் தான் என்னை காப்பாற்ற முடியும் என்ற மாயையை மக்கள் மனதில் விதைத்து குளிர் காயும் அன்பர்களே ஒரு முறை என் மக்களை முழுமையாக கேட்டுப் பாருங்கள் என்னை அழிக்க எவரேனும் உண்டா என்றால் உண்டு 
என்னைவைத்து தன் சுய நலத்திற்க்காக பயன்படுத்தும்  கேவலமானவர்கள் இங்கு நிறைய உண்டு அவர்கள் தினமும் அவர்கள் என் பெயரை சொல்லி சொற்பொழிவு ஆற்றும்போது நானே கூனி குறுகி போகிறேன் 
என் புகழை பெருமையை பாடிய முத்தமிழ் புலவர்கள் தன் பொன்மொழிகளால் புகழப்பெற்ற நான் இன்று நினைத்து நினைத்து வேதனையால் துன்பப்படுகிறேன் 
 நான் யார் ?
  
                      உங்கள் தமிழ் என்னையும் அழிக்க எவரேனும் உண்டோ?
   எனக்கென்று ஒரு மரியாதை எனக்கென்று ஒரு பாரம்பரியம் உண்டு அதை அழிப்பதின் முன்னோடிகள் இன்று உருவாகியிருக்கும் ஆடம்பர விரும்பிகள் 

என் பாரதியின் வரிகள் :
      வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ் மொழி 
     வாழிய வாழிய வே ,
     வான மளந்த தனைத்தும் அளந்திடும் 
     வண் மொழி வாழிய வே 
     ஏழ்கடல் வைப்பினுந்  தன்மணம் வீசி 
     இசை கொண்டு வாழிய வே 
     எங்கள் தமிழ் மொழி எங்கள் தமிழ் மொழி 
     என்றென்றும்  வாழிய வே  

இன்னும் தமிழுடன் உங்களோடு பயணிப்பேன் ................

இதை படித்துவிட்டு தவறாமல் உங்கள் கருத்துகளையும் ஓட்டுகளையும் அளியுங்கள் இது நீங்கள் கொடுக்கும் தமிழின் பெருமை........

4 கருத்துகள்:

  1. நம் தமிழுக்கு அழிவு என்பதே கிடையாது.........

    பதிலளிநீக்கு
  2. என் தமிழுக்கு என்றுமே தலைகுனிவு கிடையாது......

    பதிலளிநீக்கு
  3. இதை வைத்து பிழப்பு நடத்துவதே பலரின் ..........

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...