புதன், 1 டிசம்பர், 2010

ஐயோ இது உண்மையா ? 4

அப்பொழுது அவர்களை பார்த்துக்கொண்டு பல கண்கள் இவர்களை பார்க்கின்றன அந்த கண்கள் அனைத்தும் இரவில் மிக ஒளியுடன் பிரகாசமாக தெரிந்தன,இவர்களுக்கு மிகவும் நடுக்கத்தை உண்டாக்கின ஆனால் அது என்னவென்று தெரிந்து கொள்ள அந்த கண்கள் தெரிந்த பகுதியில் உற்று நோக்கினர்
  
    ஒரு கருப்பாக குட்டையான சில மனித உருவங்கள் ஒரு அடி உயரமே இருந்தனர் அதைக் கண்டதும் மிகுந்த அதிர்ச்சியடைந்தனர் ஒரு கூட்டமாக இருந்தனர் நாம் தவறான வழியில் வந்துவிட்டோம் இப்பொழுது என்ன நடக்குமோ என்று முருகன் சொல்லிக் கொண்டே அவர்கள் இருவரையும் பாதையிலேயே நிற்க சொல்லிவிட்டு அவன் மட்டும் அந்த கூட்டத்தை நோக்கி சென்றான் அப்பொழுது
 
  திடீரென்று அனைவரும் அங்கிருந்து பறக்க ஆரம்பித்து மயமாய் மறைந்துவிட்டனர் எங்கே சென்றிருப்பார்கள் என்று சுற்றும் தேடினான் யாரையும் காணவில்லை எங்கே சென்றிருப்பார்கள் மீண்டும் மீண்டும் அவன் மனதில் அதே எண்ணம் தன் உயிரை விட அவன் மனதில் இப்பொழுது அவர்களைக் காண்கின்ற ஆர்வமே அவனுக்கு அதிகமானது அவன்  அவர்களை தேட ஆரம்பிக்க எண்ணி புறப்பட முற்படும் போது
 
அவர்கள் இருவரையும் விட்டு வந்தது ஞாபகம் வந்தது வேகமாக திரும்பிவந்து பார்த்தான் அந்த இடத்தில் அவர்கள் இருவரையும் காணவில்லை பகீரென்றது இதயம் படபடக்க ஆரம்பித்தது 

  உடல் முழுவதும் வியர்வையால் நனைந்தது வேக வேகமாக அந்த பாதையிலேயே நடக்க ஆரம்பித்தான் ஆனால் யாரும் தென்படவில்லை பாதை ஒரு மலையின் உச்சியை நோக்கி சென்றது அப்பொழுது சிலரின் பேச்சு சத்தங்கள் அவன் காதில்  கேட்டன அப்படியே ஒரு நிமிடம் நின்றான் அந்த சத்தமும் நின்றுவிட்டன

எந்த திசையில் இருந்து வந்தது என்று சுற்றும் கண்களை சுழல விட்டு காதில் ஏதேனும் சத்தம் வருகிறதா என்று பார்த்தான் எந்த சத்தமும் வரவில்லை அப்பொழுது அவன் காலில் ஏதோ சத சதவென்று ஒட்டியது என்னவென்று பார்த்தான் இருட்டில் தெரியவில்லை கையால் தொட்டு பார்த்தான்
 
  இரத்தம் அப்படியே உறைந்துவிட்டான் அவர்கள் இருவரையும் யாரோ கொன்றுவிட்டார்கள் என்று நினைக்கும் போது மீண்டும் பேசுக் குரல்கள் கேட்டது ஆனால் என்ன பேசுகிறார்கள் என்று புரியவில்லை அந்த பேச்சு வந்த திசையை நோக்கி நடக்க ஆரம்பித்தான் அவன் நடக்க நடக்க அந்த பேச்சு  சத்தமும் நகர்ந்து கொண்டே சென்றது
 
அவர்களுக்கு எதுவும் ஆகிவிடக் கூடாது என்று ஒரு பக்கம் நினைவு இறந்திருப்பார்களோ  என்று மாறி மாறி அவன் எண்ணங்கள் தடுமாறியது அப்பொழுது ஏதோ பலர் ஓடிவரும் சத்தம் கேட்டது மரங்களெல்லாம் சலசலத்தன இதோ வந்துவிட்டார்கள் பார்த்தவுடன் உயிரே நின்றுபோனது.....................

இன்னும் பல மர்மங்களுடன்................
உங்கள் கருத்துக்களை மறவாமல் எழுதுங்கள்....... ..

7 கருத்துகள்:

 1. முந்தைய மூன்று பாகங்களுமே மிகவும் அருமை இது அதை விட அருமை என் வாழ்த்துக்கள்.........

  பதிலளிநீக்கு
 2. நான் இப்போதுதான் முதன்முதல் முறையாக உங்கள் தளத்திற்கு வருகிறேன் தாமத்திற்கு மன்னிக்கவும் தோழி,

  தளத்தின் தலைப்பே ”அன்பே கடவுள்” அருமை.

  தொடரட்டும் உங்கள் பொன்னான பணி

  வாழ்த்துக்களுடன்
  மாணவன்

  பதிலளிநீக்கு
 3. கருத்துரை வழங்குவதில் சொல் சரிபார்ப்பு (word verification)நீக்கினால் கருத்துரை வழங்குவதற்கு இன்னும் வசதியாக இருக்குமல்லவா!

  தொடரட்டும் பணி

  நன்றி
  நட்புடன்
  மாணவன்

  பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...