ஞாயிறு, 30 ஜனவரி, 2011

ஐயோ இது உண்மையா .5

ஐயோ இது உண்மையா .5


அங்கே வருபவர்களின் கண்கள் அனைத்தும் இருட்டில் பளபளத்தன வேகமாக வந்தவர்கள் இவனுக்கு சற்று முன்னால் இருந்த  பள்ளத்தில் இறங்கினர் அங்கே அவன் சற்று மன தைரியத்துடன் எட்டிப் பார்த்தான் அங்கே கண்ட காட்சி அவனை மிகப் பெரும் வியப்பில் ஆழ்த்தியது 
அங்கே ஒரு அடி உயரமுள்ள ஆயிரக்கணக்கானோர் அமர்ந்திருந்தனர் அவர்கள் அனைவரும் வட்ட வடிவமாக அமர்ந்திருந்தனர் அவர்கள் சுற்றியும் மிகப்பெரும் ஒளி மிகப்பிரகாசமாக தெரிகிறது அவர்களின் நடுவே வயதான ஒருவர் அமர்ந்திருக்கிறார் 

அவர்கள் அமர்ந்திருக்கும் இருக்கைகள் அனைத்தும் பிரகாசமாக ஜொலிக்கின்றன அப்பொழுதுதான் முருகனுக்கு புரிந்தது அவை அனைத்தும் தங்கத்தால் ஆனவை  என்று  
அவர்கள் வைத்திருக்கும் கைத்தடிகள் முதற்கொண்டு தங்கத்தால் பிரகாசித்தது என்ன தான் நடக்கிறது என்று உற்று பார்க்கத் தொடங்கினான் நடுவே அமர்ந்திருந்த பெரியவர் அனைவருக்கும் ஏதோ கட்டளையிட்டுக் கொண்டிருந்தார் அவர்களும் கோசம் செய்துகொண்டிருந்தனர் ஆனால் அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பது அவனுக்கு புரியவில்லை அவன் ஆச்சரியத்தில் இருக்கும் போதே 


அப்பொழுது அவன் காதருகே ஒரு குரல் கேட்டது ஆனால் உருவம் எதுவும்  தெரியவில்லை மீண்டும் ஏதோ சமிக்கை குரல் கண்ணுக்கு எதுவும் தென்படவில்லை அவன் சற்று பின்னால் நகர்ந்து சுற்றும் கண்களை சுழல விடுகிறான் ஒரே இருட்டு மீண்டும் திரும்பி முன்னால் பார்த்தான் அங்கேயும் கும்மிருட்டு அங்கே மற்றவர்கள் இருந்ததிர்க்கான அடையாளமோ எதுவும் தென்படவில்லை 
நடுநிசி எங்கு செல்வது என்றும் அவர்கள் இருவரின் நினைவும் அப்பொழுதுதான் அவனுக்கு திரும்ப வந்தது திக்கு தெரியாமல் அமர்ந்து கொண்டான் அப்பொழுது அவன் எதிரில் நடுக்காட்டில் பார்த்தான் நேற்றிரவு வந்த அதே வெளிச்சம் இருந்தது அவர்கள் அனைவரும் மறைந்ததர்க்கான் காரணம் அந்த வெளிச்சமாகத் தான் இருக்கவேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கும் போதே 
 
அவர்கள் இருவரும் அவன் பின்திசையிலிருந்து ஒரே குரலில் முருகா முருகா என்று மிகப் பெரும் சத்தத்துடன் கூப்பிட்டனர் அந்த குரல்கள் வந்த திசையை நோக்கி வேகமாக ஓடினான் இவனும் அவர்களைக் கூப்பிட்டுக் கொண்டே ஓடினான் காடே நிசப்தமாக இருந்தது இவர்களின் குரல் காட்டின் நான்கு திசைகளிலும் எதிரொலித்தது ஓடினான் பல மரம் செடி கொடிகளிலும் முட்டி மோதிக் கொண்டே ஓடினான் 
சட்டென்று அவர்கள் இருவரின் குரல் நின்றுவிட்டது இவன் ஒரு நிமிடம் நின்றான் மீண்டும் மீண்டும் இவன் அவர்களைக் கூப்பிட்டான் ஆனால் பதில் வரவில்லை .உடனே அந்த குரல்கள் வந்த திசையை நோக்கி செல்ல ஆரம்பித்தான் அப்பொழுது அவன் காலை ஏதோ தட்டிவிட கீழே விழுந்தான் சரிவில் உருண்டு நேராக கீழ்  நோக்கி சென்றான் அவனால் தன்னை காப்பாற்றிக் கொள்ளும் நிலையில் இருந்து தாண்டிவிட்டான் தனக்கு இத்தோடு வாழ்க்கை முடிந்துவிட்டது என்று நினைத்து முடிப்பதற்குள் இரு கரங்கள் அவனை அள்ளிக்கொண்டது அது ஒரு மரத்தின் கிளையில் அவனை அமரசெய்தது மீண்டும் மறைந்துவிட்டது 
இவனுக்கு என்ன நடந்தது என்று என்றே தெரியவில்லை தான் மரத்தின் மீது எப்படி வந்தோம்  என்றே அவனுக்கு தெரியவில்லை இதெல்லாம் ஒரு நொடிப்பொழுதில் நடந்துவிட்டது 
அப்பொழுது நடுக்காட்டில் இருந்த வெளிச்சம் அவனை நோக்கி வர ஆரம்பித்தது அவன் பின்னால் திரும்பி பார்த்தால் அந்த மரத்தின் மற்றொரு கிளையில் அவனை உற்று பார்த்தபடியே அவனை நோக்கி பாய தயாராக ....................தொடரும் இன்னும் பல மர்மங்களுடன் 

ஹலோ ஹலோ எங்கே போறிங்க ...
இதை  படித்து தங்களின் கருத்துக்களையும் ஓட்டுகளையும் மறக்காமல் பதியுங்கள் 
இதன் முந்தைய பாகங்களை படிக்க கீழே  உள்ள லிங்கிற்கு செல்லவும் 


ஐயோ இது உண்மையா ?ஐயோ இது உண்மையா ? தொடர்ச்சி .2


ஐயோ இது உண்மையா .3


ஐயோ இது உண்மையா ? 4

வெள்ளி, 28 ஜனவரி, 2011

இந்து மதம் எங்கே போகிறது பகுதி - 1


இந்து மதம் எங்கிருந்து வந்தது?
நான்காயிரம் வருடங்களுக்கு முன்பு ஓடிச் செல்லுங்கள் முடிகிறதா? உங்கள் மனக்குதிரையில் ஏறி உட்கார்ந்து கொண்டு கற்பனை, சிந்தனை இரண்டு சாட்டைகளாலும் விரட்டுங்கள்.

வரலாறு துல்லியமாக கணிக்க முடியாத காலத்தின் பாதாளப் பகுதி அது. மலைகள், காடுகள் என மனிதர்களையே பயமுறுத்தியது பூமி.

இமயமலைக் குளிர் காற்றில் நடுங்கியபடி ஓடிக் கொண்டிருக்கிறது சிந்து நதி. என்ன திமிர்? அத்தனை குளிரிலும் மானசரோவரில் பிறந்த சுமார் ஆயிரம் மைல்கள் மலையிலேயே நடை பயின்று பிறகுதான் கீழிறங்குகிறாள் சிந்து.

அது அந்தக்கால ஆப்கானிஸ்தான் நிர்வாண மனிதர்கள். சாப்பிடத் தெரியாது. எதுவும் தெரியாது. மாலை மயங்கி இருள் இழைய ஆரம்பித்தால் பயத்தில் சிகரத்தில் ஏறி குகைகளுக்குள் விழுந்து விடுவார்கள். சூரியன் மறுநாள் வந்து விளக்கேற்றிய பிறகுதான் பயம் போய் வெளியே வருவார்கள்.

பூமியே புதிராக தெரிந்தது. அவர்களுக்கு நதியை யார் துரத்துவது? பயந்தனர். மரத்தின் தலையைப் பிடித்து உலுக்குவது யார்? பயந்தனர் சுற்றிலும் இருள் பூசியது யார்? நடுங்கினர்.இந்தப் பயத்தாங்கொள்ளிகளுக்கிடையே சிலபேர் பயப்படாமல் பார்த்தார்கள். மலை, நதி, மரம், வானம், உற்றுப் பார்த்தார்கள்.

அவர்களின் மூளைக்குள்ளும் சூரியன் உதித்தது. மனிதனுக்கே உரிய சிந்தனா சக்தி அந்த சிலருக்கு வயப்பட்டது. சிந்தனையை இரு கண்களிலும் ஏற்றி வைத்துக் கொண்டு பார்வையால் உலகத்தைக் குடைந்தனர்.

விளைவு...! கண்டுபிடிக்கப்பட்டது தெய்வம். இதுவரைப் பார்த்து பயந்த மரம், செடி, கொடி, மலை நதி தான் தெய்வம். இருட்டை ஓடஓட விரட்டுகிறானே அந்த வெளிச்சம்தான் தெய்வம் என்றான் உற்றுப் பார்த்தவன். (இந்த தெய்வம் என்ற பதம்தான் அய்ரோப்பியர்களால் டிவைன் (Divine) என வழங்கப்படுகிறது. 

ஆரியர்களில் ஒரு பகுதிதான் அய்ரோப்பாவுக்கு நகர்ந்தது).இயற்கைதான் கடவுள். துரத்தும், உலுக்கும் சக்தி தான் கடவுள். உற்றுப் பார்த்தவன், பார்த்தான் பார்த்தான் பார்த்துக் கொண்டே இருந்தான்.அவனுக்கு ரிஷி என பெயர். ரிஷி என்றால் பார்ப்பான், பார்ப்பான், பார்த்துக்கொண்டே இருப்பான்.

நமக்கும் மேல் ஒரு சக்தி இருக்கிறது என கண்டுபிடித்தவர்கள் அடுத்ததாய் அதற்குநாம் கட்டுப்பட்டு வாழ்வதெப்படி என்பதையும் வகுத்தார்கள்
உண்டாயிற்று வேதம்.

உற்றுப் பார்த்து சிந்தித்து சிந்தனையாளர்களால் நாகரிகம் மெல்ல மெல்ல அரும்பத் தொடங்கியது.‘இந்த உலகமே தெய்வம்தான். நாம் வாழ சந்தோஷமாக வாழத்தான் தெய்வத்தைப் பயன்படுத்த வேண்டும்” -வகுத்தது வேதம்.“Civilisation never born, but, it is the heritage of humanity” என பிற்பாடு அமெரிக்க அறிஞர் ப்ரைஸ் சொன்னது போல் தொட்டுத் தொடர்ந்தது நாகரிகம்.

முதலில் இயற்கையைப் பார்த்துப் பயந்த மனிதர்களுக்கு சிந்தனை செய்து உற்றுப் பார்த்த மனிதனான ரிஷி அறிவுரை சொன்னான்.

பயப்படாதே.. நீயும் நானும் நன்றாக வாழ வேண்டும். அதற்கு இந்த மரத்தைப் பயன்படுத்துவோம்.நதிகளைப் பயன்படுத்துவோம். இயற்கை நமக்காகத்தான் வேதம் ஒரு கட்டுப்பாடு மிக்க கலாச்சாரத்தைக் கொண்டு வந்தது.
ஆரிய இனத்தவர்கள் என வரலாற்று ஆசிரியர்களால் வர்ணிக்கப்படும்...இம் மனிதர்களிடையே இப்படித்தான் வேத மதம் பிறந்தது.

இந்த நல்லெண்ணச்சிந்தனை வளர்ந்து மெருகேற்றியதுதான் சமூக அமைப்பு. கலாச்சாரத்தைக் கட்டிக் காப்பாற்ற. ஒரு கட்டுமானம் வேண்டும். அது ஆளப்பட வேண்டும். வேதம் சொன்ன நெறிமுறைகளை வைத்து வாழ கற்றுக்கொள்ளப்பட வேண்டும்.அதற்கு என்ன செய்தார்கள்! பிரித்தார்கள். மூன்றாக பிரித்தார்கள். தங்களைத் தாங்களே நிருவாகம் செய்வதற்கு ஆள்வதற்கு ஒரு பிரிவு. அவர்கள் சொன்னபடி செய்து முடிப்பதற்கு ஒரு பிரிவு. இதோடு நிறுத்தவில்லை.

ஆள்பவனையும் ஆளப்படுபவனையும் வேதம் சொல்லும் நெறி முறைகளைச் சொல்லிக்கொடுத்து... அவர்கள் தடம் பிறழாமல் காப்பதற்காக ஒரு பிரிவு.ஆள்பவன் க்ஷத்திரியன் ஆனான். ஆளப்படுபவன் அதாவது உழைப்பவன் வைசியன் ஆனான். இவர்கள் இரண்டு பேரையும் வேதத்தை வைத்துக் கொண்டு, வேதத்தைக் கற்று நீதி நெறிப்படுத்தியவன் பிராமணன் ஆனான்.

ஆட்சி செய்வதற்கே நேரம் போதவில்லை என அதில் தீவிர கவனம் செலுத்த ஆரம்பித்தனர் க்ஷத்திரியர்கள். உழைக்க வேண்டும். பிழைக்க வேண்டும் என்பதில் தீர்மானமாக வியர்வை சிந்த புறப்பட்டுவிட்டார்கள் சிந்தனாசக்தி குறைந்த அப்போதைய வைசியர்கள்.பிராமணர்கள் பார்த்தார்கள். இவர்கள் இருவருமே வேதத்தை விட்டு விட்டுப் போய்விட்டார்களே....
அதிலுள்ள கருத்துகளை கட்டளைகளை கர்மாக்களை நாம்தானே சிரமேற்கொண்டு செயல் படுத்தவேண்டும். எனவே வேதம் பிராமணர்கள் கைக்குப் போனது.இதெல்லாம் முழுக்க முழுக்க ஆப்கானிஸ்தானில் நடந்ததாகத்தான் வேத காலத்தைப் பற்றிய ஆராய்ச்சிகள் அறிவிக்கின்றன.

ரிசா, குபா, க்ரமு என்கிற நதிகள் வேதத்தில் ஓடுகின்றன. இவை ஆப்கன் தேச நதிகள் என்பதால் வேதகாலம் பெரும்பாலும் ஆப்கன் பகுதியில்தான் நிகழ்ந்துள்ளதாகச் சொல்கின்றன.

வேதத்தில் மூழ்கியிருந்தோரின் முடிவுகள்.வேதம் பிராமணர்கள் கைக்கு போனதும் அறமும் தர்மமும் கர்மாக்களும் செவ்வனே நடந்தேறி வந்ததால்.. வேத மதம் பிராமண மதம் ஆயிற்று.

ஆரிய மதம் வேதமாகி வேத மதம் பிராமண மதமாகி, காலவெள்ளத்தில் அவர்கள் இந்தியாவிற்குள் அடியெடுத்து வைக்க, அப்போது இங்கே சுமார் 450 மதங்கள் இருந்தனவாம். இவைகளில் எது இந்து மதம்?                               இந்த தொடர் அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார்  


தொடரும்

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...