சனி, 26 பிப்ரவரி, 2011

தலா 11 லட்சம்


        தினமும் வெளியே புறப்படும் பொது திரும்ப வீடு வந்து சேர்ந்தால் தான் நிஜம் என்ற நிலை இப்பொழுதெல்லாம் வாகனத்தின் பெருக்கம் சாலைவிதிகளை மதிக்காத பயணம் அப்படி ஏதும் நிகழ்ந்துவிட்டால் உடனடியாக காப்பாற்ற வலி இருந்தும் காப்பாற்ற முடியாத நிலை அதற்கான ஒரு அதிரடி சட்டம் .........

அந்த தங்கமான நிமிடங்கள் 

சாலை விபத்துக்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது . விபத்தில் சிக்கியவர்களை கொண்டுபோய் சேர்த்தால் கூட பிழைப்பது அரிதாகத்தான் இருக்கிறது .


கேட்டால் "ஒரு மணி நேரத்திற்கு முன்பு கொண்டுவந்திருந்தால் ஒரு வேளை காப்பாற்றி இருக்கலாம் " என்று சொல்கிறார்கள் .மருத்துவ உலகில் இந்த நேரத்தை "கோல்டன் ஹவர்ஸ் " என்கிறார்கள் சாலையில் விபத்தில் சிக்கியவர்களை ,ஒரு சிலர் காப்பாற்ற நினைத்தாலும் நமக்கெதற்கு இந்த வீண் பிரச்சினை போலிஸ் விசாரணை என்று வந்தால் யார் பதில் சொல்லுவது ?மேலும் மருத்துவமனையிலும் ஆயிரத்தெட்டு கேள்விகள் கேட்பார்களே என்பதால் தான் ஒதுங்கிகொள்கிறார்கள்.


இந்த பிரச்சினைக்கு கேரளா சட்டசபையில் உள்துறை அமைச்சர் கொடியேறி பாலகிருஸ்ணன் அருமையான தீர்வு சொல்லி இருக்கிறார் விபத்தில் சிக்குபவர்களுக்கு உதவினால் போலீஸ் வழக்கு பதிவு செய்யும் என்ற அச்சத்தின் காரணமாகத்தான் பலர் உதவி செய்வதில்லை இனிமேல் யாரும் அப்படி பயப்படத்தேவையில்லை , சாலை விபத்தில் சிக்குபவர்களை உடனடியாகத் தங்கள் காரிலோ அல்லது வேறு வாகனத்திலோ கொண்டு சென்று அருகில் உள்ள மருத்துவமனியில் சேர்ப்பவர்களுக்கு இனிமேல் சன்மானம் வழங்கப்படும் என்று அர்வித்து இருக்கிறார்.


இதற்காக ஒவ்வொரு எஸ் பிஅலுவலகங்களுக்கு தலா பதினோரு லட்சம் ஒதுக்கவும் செய்திருக்கிறார் எந்த காரணம் கொண்டும் வழக்குத்தொல்லை இல்லை போலீஸ் தொந்தரவு இருக்காது என்று அமைச்சர் உறுதியளித்து இருப்பதால் இனி மனிதர்கள் பயமின்றி மனிதபிமானத்துடன் செயல்பட முடியும்


 இந்த விசயத்தில் கேரளாவை போல அனைத்து மாநிலங்களும் பின்பற்றலாமே?


ஓட்டு போடா மறந்துவிட்டீர்களே ? 
தவறாமல் ஓட்டு போடுங்கள் 

வெள்ளி, 25 பிப்ரவரி, 2011

சுப்ரீம் கோர்ட் உத்தரவு

ஏழ்மை என்றாலே  ஏன் இவ்வளவு மட்டமான எண்ணம் மற்றவர்களுக்கு கல்விக்கூடங்கள் என்பது வியாபாரம் செய்யும் இடமல்ல அது ஒரு சேவை அதை தொழிலாக செய்யவேண்டாம் 

ஏழை மாணவர்களுக்கு 25 சதவீத  இட ஒதுக்கீடு அளித்தே ஆகவேண்டும்  என்று தனியார் பள்ளிகளுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது 

 நாட்டின் எதிரகாலத்தின் முதலீடு கல்வி

பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்களுக்கு இருபத்தைந்து சதவீத இட ஒதுக்கீடு வழங்க அரசு மேற்கொண்ட முயற்சி தவறு இல்லை ,தனியார் பள்ளிகளில் அவர்களுக்கு தரமான கல்வி அளிப்பதில் என்ன தவறு ?நாட்டுக்காக  ஒரு முதலீட்டை நீங்கள் இன்று விதைக்கிறீர்கள் குழந்தைகள் தான் எதிர்கால  இந்தியா எனவே காட்டாயம் இதை அமுல்படுத்தவேண்டும்  


உங்கள் கருத்துக்களையும் பதியுங்கள் 

புதன், 23 பிப்ரவரி, 2011

தவறாமல் படியுங்கள்


கோட்டயம் மெடிகல் காலேஜ் ஆஸ்பத்திரியில் அட்டெண்டராக 1970ல் தற்காலிகப் பணியில் சேர்ந்தவர் பி.யூ.தாமஸ். இரக்க குணம் படைத்தவர். ஏழை எளிய மக்களுக்குத் தன்னால் இயன்ற உதவிகளை ஆரம்பத்தில் இருந்தே செய்து வந்தார். ஆஸ்பத்திரியில் வரும் எத்தனையோ ஏழைகள் உண்ண உணவு இல்லாமல் கஷ்டப்படுவதைக் கண்ட அவருக்கு, தன்னால் இயன்ற ஓரிருவருக்காகவாவது உணவு கொடுத்தால் என்ன என்று தோன்ற அதை உடனடியாக செயல்படுத்தினார். ஓரிருவர் என்று ஆரம்பித்தது நாளடைவில் எண்ணிக்கை சிறிது சிறிதாக அதிகரிக்க ஆரம்பித்தது. தன் குறுகிய வருமானத்தில் பலருக்கு உணவளிக்க ஆரம்பத்தில் அவர் மிகவும் சிரமப்பட்டார்.

ஆனால் அவரது நல்ல சேவையைக் கண்ட சிலர் தாங்களும் அவருக்கு உதவ முன் வந்தனர். ஒருவர் அரிசி தர முன் வந்தார். இன்னொருவர் உணவு கொண்டு வர வாகன உதவி செய்ய முன் வந்தார். இப்படி பலரும் பல விதங்களில் உதவ முன் வந்தனர். பணமாகவோ, பொருளாகவோ தர முடியாதவர்கள் தங்கள் உழைப்பைத் தர முன் வந்தனர். இன்று கிட்டதட்ட 1200 பேருக்கும் மேலாக இவர் அமைத்த நவஜீவன் என்ற அமைப்பு மூலம் உணவு பெறுகிறார்கள். இன்று நவஜீவன் சமையலறையில் பணியாளர்களும், தன்னார்வத் தொண்டர்களுமாக சேர்ந்து சுமார் 50 பேர் பணி புரிகிறார்கள்.

மனநிலை சரியில்லாமல் தெருவில் சுற்றிக் கொண்டு இருப்பவர்கள் மீது இரக்கம் கொண்டு அவர்களுக்குப் பாதுகாப்பாக தங்க இடமும், உண்ண உணவும் தரவும் அவர் முற்பட்டார். மனநிலை சரியில்லாதவர்களை பராமரிப்பது அவ்வளவு சுலபமான காரியம் அல்ல. ஆனால் கருணை உள்ளம் படைத்த அவருக்கு அவர்களை அப்படியே விட மனமில்லை. அன்பும் ஆதரவும் காட்டி அவர்களுக்கு அபயம் அளித்தார். அப்படி அங்கு வாழ்ந்து குணமான பலர் அவருடைய சேவையில் தங்களையும் இணைத்துக் கொண்டார்கள். ஒரு நல்ல காரியத்தைத் தொடங்கி, விடாமுயற்சியுடன் தொடர்ந்தால், நாளடைவில் பலருடைய உதவியும் ஒத்துழைப்பும் கிடைக்கிறது என்பதற்கு தாமஸின் முயற்சிகளே உதாரணம்.


இப்படி ஆயிரக்கணக்கான மக்களுக்கு தினமும் உதவி வரும் தாமஸிற்கு நான்கு மகள்கள். ஒரு மகன். மகன் ஏழு வயதில் நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டான். இப்படி கருணையே உருவானவருக்கு கடவுள் கருணை காட்டத் தவறி விட்டாரே என்ற வருத்தத்தில் ஒரு பத்திரிக்கையாளர் அவரிடம் ஒரு பேட்டியில் கேட்டார். "ஏழை எளியவர்களுக்கு இத்தனை சேவை புரியும் உங்கள் ஒரே மகனை இறைவன் பறித்துக் கொண்டாரே என்று தங்களுக்கு வருத்தமாயில்லையா?"

அந்தக் கேள்வி நியாயமானதே. எப்படிப்பட்டவருக்கும் அப்படி தோன்றாமல் இருப்பது அரிது. ஆனால் தாமஸ் சொன்னார். "ஏழு வயதே ஆயுள் உள்ள ஒரு குழந்தையை பூமியில் பிறப்பிக்க வேண்டி இருந்த போது இறைவன் அந்தக் குழந்தையை பாசத்துடன் வளர்க்க ஏற்ற நபராக என்னைக் கண்டதாக நான் நினைத்துக் கொள்கிறேன். இது கடவுள் என் மேல் வைத்திருக்கும் நம்பிக்கையைக் காட்டுகிறது என்றே எண்ணுகிறேன்"
 
மகன் இறந்ததும் நல்லதற்குக் காலமில்லை என்று விரக்தி அடைந்து தன் சேவைகளை நிறுத்தாமல், கடவுள் மீது கோபம் கொண்டு ஏசாமல், இப்படி எண்ண முடிந்த நபரைப் பற்றி இனி என்ன சொல்ல?

இது அனைவரும் அறிய வேண்டுமென்பதே என் விருப்பம்...............

உங்கள் கருத்துக்களையும் தெரிவியுங்கள்....

திங்கள், 7 பிப்ரவரி, 2011

எங்களை காப்பாற்றுவீர்களா........?

அன்பு வணக்கம்.......
  இது எரிந்து கொண்டிருக்கும் தீக்குச்சி,ஈரம் வேண்டிய விண்ணப்பம் அல்ல தீக்குச்சி என வினைத்து தீயில் இடப்பட்ட எழுது கோலிர்க்காண இரங்கல் கடிதம்......

எழுத வேண்டிய பொருளை எரியூட்டுவது சரியா? பள்ளிக்கு செல்லவேண்டிய பச்சிளங் குழந்தைகளை பணிமனைக்கு அனுப்புவதைப் போல உழைக்கும் சிறார்களை ஊக்கப்படுத்தி உழைப்பை உறிஞ்சும் ஈனர்களே உங்களுக்கு இன்னுமா உரைக்கவில்லை இந்தியாவின் வல்லரசுக்கு இதுவும் இடையூருதான் என்று............

நாளைய இந்தியாவின் வல்லரசு மட்டுமல்ல வளர்ச்சிக்கும் குழந்தைகளின் பங்கு அவசியம் என்பதை என் மறந்து போனோம் என்பது மட்டும் ஏன் இன்னும் புரியவில்லை எத்தனையோ மாற்றங்கள் ஏராளமான மறுமலர்ச்சிகள் சிறப்பான சீர்திருத்தங்கள் பறைசாற்றும் பகுத்தறிவு என அத்தனை இருந்தும் வேர்புழுக்களாக வேரூன்றி விட்ட குழந்தை தொழிலாளர் முறையை முழுமையாக ஒழிக்க முடியாமல் போன காரணம் ஏனோ ?குழந்தைகளை வேலைக்கு அனுப்பும் பெற்றோர்களை கோழைகள் என்றால் குற்றமில்லை என்றான் ஓர் பேனாக்காரன் .

மனிதநேயமற்ற மாக்களின் (விலங்கு) இரக்கமற்ற அரக்க குணத்திற்கு ஏன் குழந்தைகளை பலியாக்க வேண்டும் .ரோஜாவை சுமக்கும் மண்ணில் மண்ணை சுமக்கும் இந்த ரோஜாக்களை பார்க்கும் போது உள்ளத்தில் இருந்து உதிரம் சிந்தவில்லையா? உதிரம் இல்லை ஒரு துளி கண்ணீராவது சிந்தியிருந்தால் கூட இந்த அவல நிலை அரங்கேறி இருக்காது வளர்ந்த நகரம் முதல் நலிந்த நகரங்கள் வரையில் ஆம் பணம் படித்த சமூகத்தில் கண்ணாடி கதவுகளுக்கு பின்னாலும் இருட்டு தொழிற்சாலையின் இரும்பு கைப்பிடி இடுக்குகளில் உணவகங்களில் எச்சத்தின் மிச்சத்தை எடுத்துப் போட கதவற்ற கிராமங்களில் கால்நடை சகதிகளில் என எங்கு நோக்கிலும் குழந்தைகளின் உழைப்பை உறிஞ்சி தோரணம் என்ற பெயரில் தூக்கில் இடும் கொடுமையினை எத்தனை காலம் தான் ஏற்பது...?

இடங்கள் மட்டும் தான் வேறு வேறு ஆனால் இழப்பு ஒன்று தான் ஆனால் நாம் இழந்து கொண்டிருப்பது இந்தியாவின் எதிர்காலம் என்பதை உணரவேண்டியது அவசியம் ஓ  மனிதர்களே அது என்ன புதுமை கலாசாரம் .?

சம்பளம் குறைவு என்பதற்காக சிறுவர்களை பணியில் அமர்த்துவது ? செய்கூலி குறைவு என்பதற்காக சிற்பத்தினையே மண்சுமக்க வைக்கும் மனிதநேயமற்ற சிற்பிகள் ,சமுதாயத்தின் சாபக் கேடுகள், எங்கள் நாடு தொழில் துறையில் முன்னேற்றம் கண்டுள்ளது கணினி துறையில் கணக்கற்ற சாதனை படைத்துள்ளது ஏற்றுமதி இறக்குமதியில் எங்களை மிஞ்ச எவருமில்லை என பட்டாடை உடுத்தி பகட்டு காட்டும் பாழடைந்த சமுதாயமே உனது காலடியில் சற்று உற்றுப்பார் கந்தல் துணிகளின் கசங்கலில் தன் கண்ணீர் துளிகளை சங்கமித்து குழந்தை தொழிலாளி என்ற மடத்தனமான முகவரியோடு மண்ணாகிவிட்ட ஓர் ஆற்றல் மூலக் கூற்றினை சற்று உற்றுப்பார் உறுத்தவில்லையா உங்களுக்கு ?.

உடையில் ரோஜாவையும் உள்ளத்தில் முள்ளையும் வைத்துக்கொண்டு ஊரெல்லாம் ஒன்றிணைத்து கொண்டாடுகிறீர்களே ஓர் குழந்தைகள் தினவிழா உள்ளம் உறுத்தவில்லையா உங்களுக்கு ?

தன் குடுமபம் ஒளி பெற சிவகாசியில் எரிந்து கொண்டிருக்கும் சிவப்பு ரோஜாக்களையும் இரும்பு தொழிற்சாலையில் இட்டு சாயம் பூசப்பட்ட ஈர இதையங்களையும் பண முதலைகளின் பணிவிடைக்கு பணியமர்த்தப்பட்ட உயிருள்ள கேள்விக்குரிகளையும் இணைத்து இன்னும் வலுவிழந்து போன கிராமத்தில் ஒளியிழந்து போன ஓலைக்குடிசைகளில் கால்நடைகளுடன் கலந்து விட்ட இறந்தகால இந்தியாவை மீட்டெடுக்க இனியேனும் முயற்சிப்போம் இந்த முயற்சிக்கு தடையாக எது வந்தாலும் அதை அகற்றுவோம் எதிர்கால இந்தியாவின் முதுகெலும்பான குழந்தைகளை குழந்தை தொழிலாளர்கள் எனப் பிரகனப் படுத்தும் அகராதி 

                   தீமை என உணர்த்துவோம் அன்றில் அதனை 
                   தீயிட்டு கொளுத்து வோம்  


இது என் உள்ளத்தை என் நட்பால் வெளியிடப்பட்டது .................

இதை படித்து தங்களின் உள்ளத்தின் கருத்துக்களை தவறாமல் பதிவிடுங்கள் ...........

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...