வியாழன், 31 மார்ச், 2011

ஒரு அதிர்ச்சி தகவல்


ஒரு அதிர்ச்சி தகவல்

இது பலருக்கு பிடிக்காத விசயமாக இருக்கலாம் பலருக்கு இது பொழுது போக்கு விசயமாகவும் இருக்கலாம் பலரின் பொழுது போக்கிற்கும் ஆபாசத்திற்கும் பயன்படும் இணையத்தளம் பல நல்ல விசயங்களை முன் நிறுத்துவதில் பின் தங்கியே  இருக்கிறது இது மிகவும் துரதிஷ்டவசமானது 

இணையத்தளம் என்பது உலகில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வுகளையும் மற்றவர்களுக்கு மிக விரைவாக அனைத்து மக்களையும் சென்றடையும் மிக அறிய கண்டுபிடிப்பு 

இது பலரின் வக்கிர எண்ணங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து பல தளங்கள் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது ,இதில் பலருக்கு பொழுதுபோக்கு என்பதே பிரதானமாக இருக்கிறது பல உண்மை செய்திகள் கூட இவர்களை போல் இருப்பவர்களால் இருட்டடிப்பு செய்யப்படுகிறது 

சரி ஒரு முக்கிய தகவலை தங்களோடு பகிர்ந்துகொள்கிறேன் 


இன்னும் பத்து ஆண்டுகளில் உண்ண உணவுக்கும் குடிநீருக்கும் கையேந்தும் நிலையை நாமே உருவாக்கி கொண்டிருக்கிறோம் 

 இதை பற்றி யாரும் கவலைப்பட்டதாக தெரியவில்லை அரசியல் பிழைப்பு நடத்தும் பல வியாபாரிகளுக்கு எடுபுடிகளாக தன்னை முதன்மைப் படுத்துவதிலும் ஒரு நடிகனுக்காக தன வாழ்க்கையை அழித்துக் கொள்வதிலும் முதன்மை பெறுவதில் தான் நாம் முன்னேற்றம்  பெற்று இருக்கிறோமே தவிர
தன இனமே அழியப்போகிறது என்ற கவலை  சிறிதும் இல்லாமல் 
இந்தியா உலக நாடுகளிலேயே  குடிநீரில் எப்பொழுதும் யாரிடமும் கையேந்தும் நிலை வரவில்லை ஆனால் நாம் முன்னேற்றம் என்ற பெயரில் நம் வளங்களை நாமே அழித்துகொண்டிருக்கிறோம்

இந்த நிலையை உணர்வதற்கும் யாரும் தயாராக இல்லை நம் வளங்களை சுரண்டுவதில் மட்டும் அந்நியர்களை உள்நாட்டு சுரண்டல்காரர்கள் என்பதைவிட அந்நிய நாட்டின் கைக்கூலிகள் என்று கூறுவதே மிகசரியாக இருக்கும் 

நம் குடிநீரை பதினைந்து ரூபாய் கொடுத்து நாமே வாங்கி அருந்துகிறோம் நமக்கு எந்த குற்ற உணர்வும் கிடையாது கேட்டால் சுத்தமான குடிநீராம் அசுத்தம் செய்வதே நாம் தான் அதை சுத்திகரிக்க செய்வதும் நாம் தான் 
காடுகளையும் வேளாண்மை நிலங்களையும் அழித்து நம் ஆடம்பர பங்களாக்கள் கட்டி வாழ்வதில் மிக உறுதியான நிலையில் அனைத்து உறவுகளையும் விட்டு தனிமையில் வாழ்வதிலே அதிக நாட்டம் நம்மிடையே மிகஅதிவேகமாக பரவிவருகிறது


ஒவ்வொரு தவறுகளையும் நாமே செய்து கொண்டு நம் இனம் அழிவதற்கும் நாமே காரணமாகிகொண்டிருக்கிறோம்  

 உங்கள் கருத்துக்களை தவறாமல் பதியுங்கள்.............................


புதன், 30 மார்ச், 2011

கடவுள் இருக்கும் இடம்

எங்கே கடவுள்?

உலகத்தை படைத்த கடவுள்.அதில் ஓரறிவு முதல் ஐந்தறிவு கொண்ட உயிர்களை படைத்து வாழ்க்கையை ஏற்படுத்தினார். கடைசியாக ஆறறிவுடைய மனிதனைப் படைத்தார்

மனிதனைப் படைத்த சிறிது காலத்திற்குள்ளேயே அவனை ஏன் படைத்தோம் என்றாகிவிட்டது கடவுளுக்கு. ஏனென்றால் மனிதர்கள் ஏதாவது கோரிக்கையைக் கடவுள் முன் வைத்து அதை நிறைவேற்றிக் கொடுக்கும் படி கேட்டு தொல்லைபடுத்த ஆரம்பித்தார்கள் இதனால் வெறுப்படைந்த கடவுள் தேவர்களை அழைத்து எங்கே போய் ஒளிந்து கொள்ளலாம் என்று ஆலோசனை கேட்டார் 

இமயமலையின் உச்சிக்கு போய்விடுங்கள் என்றனர் தேவர்கள்.

கடவுள் சொன்னார் "எவரெஸ்ட் சிகரத்திலேயே காலடி எடுத்துவைத்தவர்கள் அங்கே என்னை கண்டுபிடித்து வந்துவிடுவார்கள்"

பசிபிக் மகா சமுத்திரத்தின் அடியில் போய் ஒளிந்து கொள்ளுங்கள்

அதன் ஆழத்தையும் அளக்க ஆரம்பித்துவிட்டார்களே...

சந்திர மண்டலம், செவ்வாய் மண்டலம் என்றெல்லாம் தேவர்கள் யோசனை கூறினார்கள் அதெல்லாம் மனிதன் வரக்கோடிய இடங்கள் என்று அச்சப்பட்டார் கடவுள்

மனிதனின் மனதுக்குள் போய் ஒளிந்துகொள்ளுங்கள் அவன் தேடிப்பார்க்காத ஒரே இடம் அது ஒன்று தான் என்றார் ஒரு புத்திசாலித்தேவர் கடவுளும் அவ்வாறே செய்தார் தன்னுடைய மனதை தவிர எல்லா இடங்களிலும் கடவுளைத் தேடிக் கொண்டிருக்கிறான் மனிதன் .உங்கள் கருத்துக்களை தவறாமல் பதிவிடுங்கள்..................

வெள்ளி, 11 மார்ச், 2011

சற்று முன் சுனாமியின் கோரத்தாண்டவம் ஜப்பானில் (காணொளி)


சற்று முன்னர் ஜப்பானில் ............


சுனாமி தாக்கியது. 40 லட்சம் கட்டிடங்கள் சேதம். நீராலும் நெருப்பாலும் ஜப்பான் பாதிப்பு. மின்சாரம் துண்டிப்பு. 20 அடி உயரத்தில் பேரலை எழுந்தது. 5 அனுமின் நிலையம் மூடப்பட்டது. உயிர் சேதம் இருக்கும் என தகவல். இரயில் போக்குவரத்து, தகவல் தொடர்பு அடியோடு பாதிப்பு.
பல இடங்கலிலும் கடல் நீரால் சூழப்பட்டு பலர் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறதுஏன் இந்த கோரமுகம் இயற்கையே ..................

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...