புதன், 30 மார்ச், 2011

கடவுள் இருக்கும் இடம்

எங்கே கடவுள்?

உலகத்தை படைத்த கடவுள்.அதில் ஓரறிவு முதல் ஐந்தறிவு கொண்ட உயிர்களை படைத்து வாழ்க்கையை ஏற்படுத்தினார். கடைசியாக ஆறறிவுடைய மனிதனைப் படைத்தார்

மனிதனைப் படைத்த சிறிது காலத்திற்குள்ளேயே அவனை ஏன் படைத்தோம் என்றாகிவிட்டது கடவுளுக்கு. ஏனென்றால் மனிதர்கள் ஏதாவது கோரிக்கையைக் கடவுள் முன் வைத்து அதை நிறைவேற்றிக் கொடுக்கும் படி கேட்டு தொல்லைபடுத்த ஆரம்பித்தார்கள் இதனால் வெறுப்படைந்த கடவுள் தேவர்களை அழைத்து எங்கே போய் ஒளிந்து கொள்ளலாம் என்று ஆலோசனை கேட்டார் 

இமயமலையின் உச்சிக்கு போய்விடுங்கள் என்றனர் தேவர்கள்.

கடவுள் சொன்னார் "எவரெஸ்ட் சிகரத்திலேயே காலடி எடுத்துவைத்தவர்கள் அங்கே என்னை கண்டுபிடித்து வந்துவிடுவார்கள்"

பசிபிக் மகா சமுத்திரத்தின் அடியில் போய் ஒளிந்து கொள்ளுங்கள்

அதன் ஆழத்தையும் அளக்க ஆரம்பித்துவிட்டார்களே...

சந்திர மண்டலம், செவ்வாய் மண்டலம் என்றெல்லாம் தேவர்கள் யோசனை கூறினார்கள் அதெல்லாம் மனிதன் வரக்கோடிய இடங்கள் என்று அச்சப்பட்டார் கடவுள்

மனிதனின் மனதுக்குள் போய் ஒளிந்துகொள்ளுங்கள் அவன் தேடிப்பார்க்காத ஒரே இடம் அது ஒன்று தான் என்றார் ஒரு புத்திசாலித்தேவர் கடவுளும் அவ்வாறே செய்தார் தன்னுடைய மனதை தவிர எல்லா இடங்களிலும் கடவுளைத் தேடிக் கொண்டிருக்கிறான் மனிதன் .உங்கள் கருத்துக்களை தவறாமல் பதிவிடுங்கள்..................

7 கருத்துகள்:

  1. எங்கேயோ தேடிக்கொண்டிருக்கும் பலருக்கும் புரியாத நிலை...........

    பதிலளிநீக்கு
  2. ஆம் பலரும் தேடிக்கொண்டுதானிருக்கிறோம்

    பதிலளிநீக்கு
  3. ஆம்..இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடத்தில் தேடிக் கொண்டு இருக்கிறோம்....

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...