வெள்ளி, 27 செப்டம்பர், 2013

ஐயோ இது உண்மையா ? 6

அவன் திரும்பி பார்க்கும் போது அவன் மீது பாய தயாராக இருந்தது
கண்கள் மட்டுமே பளபளப்பாக தெரிந்து அவன் தன் கண்களை கூர்மையாக்கி அதை சற்று உற்று நோக்கினான் வேறு ஒன்றுமில்லை சிறுத்தை தான் அது ஐயோ இப்பொழுது என்ன செய்வது என்று நடுநடுங்கி போனான் முருகன் அவன் நினைத்து முடிப்பதற்குள் எதோ ஒரு சத்தம் சிறுத்தை சுருண்டு விழுந்தது கீழே என்ன நடந்தது என்று அவனுக்கு எதுவும் புரியவில்லை ஒரே இருட்டு மயம் எங்கு பார்த்தாலும் அந்த வெண்மையான வெளிச்சம் மட்டுமே தெரிந்தது இப்பொழுது இவனுக்கு அது இவன் இருக்கும் இடத்திற்கு 100 அடி தூரம் தள்ளி இருந்தது

என்ன இந்த வெளிச்சம் ஏன் இப்படி நடந்தது எப்படி இங்கு வந்தோம் இங்கிருந்து எப்படி வெளியே செல்வோம் என்று
அமைதியாக கிளையின் மீது அமர்ந்து மிகவும் மனம்கவலைப்பட அழ ஆரம்பித்துவிட்டான் அவர்கள் இருவரும் கட்டாயம் இறந்திருப்பார்கள் நான் மட்டும் எப்படி தப்பி செல்லபோகிறேன் நானும் இறப்பது உறுதி என்று ஓவென்று கத்தி அழவேண்டும் போல் அவனுக்கு தோன்றியது ஆனால் கத்த முடியவில்லை இரவு முழுவதும் கிளையின் மீதே அமர்ந்திருந்தான் உறக்கமில்லாமல்

சூரியன் உதிக்க ஆரம்பித்தான் லேசாக வெளிச்சம் தெரிய ஆரம்பித்தது அப்பொழுது கீழே இறங்க முற்பட்டு கீழே பார்த்தான்
ஐயோ கிளையின் கீழ் ஆயிரம் அடி பள்ளம் இவன் உயிரே நின்றுவிட்டது நல்லவேளை இரவில் இறங்கியிருந்தால் நிச்சயம் இந்த பள்ளத்தில் விழுந்து இறந்திருப்போம் என்று மனதில் பயந்து கொண்டே மரத்தின் மையப்பகுதிக்கு வந்து கீழே இறங்கினான்

அவன் மிகவும் களைத்துப் போயிருந்தான் ஆனாலும் தன் உயிரை காப்பாற்றிக் கொள்ள வேண்டி எழுந்து நடக்க ஆரம்பித்தான்

இரவில் நடந்தவைகளை எல்லாம் மனதில் நினைத்துக் கொண்டே நடக்கும் போது இரு தோள்பட்டையிலும் ஏதோ ஒரு கணமான உணர்வு எதோ அவன் மீது அமர்ந்திருப்பதைப் போல அவன் கைகளால் தோல் பட்டயை தட்டி விட்டான் ஆனாலும் பாரம் குறையவில்லை


ஏதோ ஒரு சிரிப்பு சத்தம் மற்றும் பேச்சுக் குரல்கள் இரு காதுகளுக்கு அருகிலும் என்னவென்று காதுகளை கூர்மையாக்கி கேட்க துவங்கினான்

அப்பொழுது அவன் தலையின் மீது ஓங்கி யாரோ அடித்தார்கள் அதே இடத்தில் மயங்கி விழுந்தான் அடுத்து என்ன நடக்கப் போகிறது என்று தெரியமலே ..................

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...